Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 92)

ஜாஃபர் அலி

ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்.

544.நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். புஹாரி: 1253 உம்மு அதிய்யா (ரலி) 545.நபி (ஸல்) அவர்களின் மகளை …

Read More »

ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.

543. ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. புஹாரி :1278 உம்மு அதிய்யா (ரலி)

Read More »

ஓலமிட்டு ஒப்பாரி….

540. (மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா (ரலி) ஜஅஃபர் (ரலி) இப்னு ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி …

Read More »

துன்பத்தில் ஓப்பாரி வைப்பதால்….

534.”ஓப்பாரி வைக்கப்படுவதால் கப்ரிலிருக்கும் மய்யித் வேதனை செய்யப்படுகிறது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1292 உமர் (ரலி) 535.உமர் (ரலி) மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரரே!’ எனக் கூறியவராக ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர் (ரலி) ‘உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?’ எனக் கேட்டார். புஹாரி:1290 அபூமூஸா (ரலி) 536.மக்காவில் உஸ்மான் (ரலி) …

Read More »

துன்பத்தில் பொறுமை கொள்வது

533. கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று …

Read More »

இறந்தவருக்காக அழுதல்.

531.தம் மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப் (ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, ‘எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!” என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே …

Read More »

கிரகணத் தொழுகையை தொழ அழைத்தல்.

526. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் அமர்ந்தார்கள். அதன் பிறகு கிரகணம் விலகியது. அன்று செய்த ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’ என்று ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள். புஹாரி : 1051 ஆயிஷா …

Read More »

கிரகணத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் கண்டது…

524. ‘ஆயிஷா (ரலி) தொழுது கொண்டிருந்தார். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறினார். அப்போது ‘இது (ஏதாவது) அடையாளமா?’ என நான் கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), ‘ஆமாம் அப்படித்தான்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். …

Read More »

கப்ரு வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்

523. ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் ‘கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!’ என்று கூறினாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கப்ருடைய வேதனையை விட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள். பின்னர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் …

Read More »

சூரிய கிரகணத் தொழுகை

520. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் …

Read More »