Featured Posts
Home » பொதுவானவை » குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 2

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 2

இந்த இனசுத்திகரிப்பு எப்படி நடைபெற்றது? இதை நடத்தியவர்கள் கையாண்ட விதங்கள் எப்படி? என்பதை விரிவாக காண்போம்

கலவரத்திற்கான முன் ஏற்பாடு

“If you hate a society, kill them all” (நீங்கள் ஒரு சமுதாயத்தை வெறுத்தால், அவர்கள் அனைவரையும் கொலை செய்யுங்கள்) – இது குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 பாடத்தில் ஹிட்லரின் ‘இறுதித் தீர்வு’ என்ற பாடத்தில் வரும் ஒரு வரி.

பாசிஸ்ட்டுகள், முஸ்லிம்கள் மேல் வீசிய அவதூறுகளாலும், ஐஎஸ்ஐ ஏஜென்டுகள், உஸாமாவின் ஆதரவாளர்கள், அல்-காயிதா தீவிரவாதிகள் என்றெல்லாம் பழித்ததாலும் ஒட்டு மொத்த இந்துக்களாலும், முஸ்லிம்கள் வெறுக்கப்பட்டார்கள்.

இது போன்று, உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்பட வேண்டும் என்று தொடருவதுதான் மீடியாக்களின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள்.

இந்த வெறுப்பு, வெறும் வெறுப்பாகவே போய்விடகூடாது “இந்து” மக்களை கொண்டே அவர்களை (முஸ்லிம்களை) அழித்து ஒழிக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிய இவர்கள், மேற்கண்ட ஹிட்லரின் பாடம் சொல்லி கொடுத்தார்கள் மாணவர்களுக்கு. இதனால் முஸ்லிம்கள் மேல் வெறுப்பை வளர்த்து கொண்ட மிகவும் நாகரிகமாக, அப்பாவியாக, இவனா இப்படி செய்வான் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு காட்சி தரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கூட குஜராத் முஸ்லிம்களை கொல்லும் பணியில் தாராளமாக ஈடுபட்டார்கள். அவர்கள் அந்த அளவுக்கு முஸ்லிம்களை வெறுக்க பயிற்றுவிக்கபட்டார்கள்.

பாசிஸ்ட்டுகள் இத்தோடு நிறுத்திகொள்ளவில்லை இவர்களின் வேலையை, மேலும் கற்று கொடுத்தார்கள் இப்படி: ‘உங்களுக்கு பிடிக்காத மக்களை கொலை செய்யுங்கள். அவர்களை பிரித்து விடுங்கள். அவர்கள் முன் அகம்பாவத்தோடு நடங்கள். நாங்களே எல்லாம் என காட்டுங்கள்.’

இப்படி இவர்கள் மாணவர்களை மட்டும் தயார்படுத்தவில்லை. பொது மக்களையும் தயார்படுத்தினார்கள். இதற்காக பல பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்தார்கள். அங்கெல்லாம் முஸ்லிம்களின் மீது வெறுப்பேறும் படி பேசினார்கள். அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் கிடைத்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது செய்திருப்பார்கள். அந்த அளவுக்கு வெறுப்பூட்டப்பட்டார்கள் அந்த இந்து மக்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் VHP-யினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

விஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. அதிலே போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: ‘எனதருமை இந்து சமுதாயமே! நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.’ என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.

குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் VHP-யினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.

இப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.
கலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, VHP, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).

முஸ்லிம்களை திட்டமிட்டு கலவரத்தின் பெயரால் கொல்வதோடு மட்டுமல்லாமல், இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக கோர்ட், வழக்கு என்று சென்றாலும் தீர்த்து கட்டிவிடுவார்கள் என்பதற்கு “மீண்டும் பெஸ்ட் பேக்கரியை நடத்த ஜகீராவின் உறவினர் முடிவு” என்ற தலைப்பில் தினமணி செய்தியை ஆதாரமாக உங்கள் முன் வைக்கிறேன்.

வதோதரா, மார்ச் 27: குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் சாட்சிகளில் ஒரவரான நபிதுல்லா ஷேக், பெஸ்ட் பேக்கரியை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மூண்ட வன்முறைகளில் ஒன்றாக வதோதரா பகுதியின் ஹனுமான் தெகாரி என்ற இடத்தில் உள்ள இந்த பேக்கரி 2002 மார்ச் 1-ல் வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டது. அதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துயர சம்பவத்துக்கு முக்கிய சாட்சியாக இருப்பவர் ஜகீரா, இவரது சகோதரர் நபிதுல்லா ஷேக். இவர் தமது குடும்பத்தாருடன் புதுப்பிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரி கடையின் பகுதியில் வசிக்க வந்துவிட்டார். இவரது இரண்டாவது மனைவியான ஹீனா, 2 குழந்தைகளும் கடந்த 1 மாதமாகவே இங்கு வசித்து வருகின்றனர்.

அவ்வப்போது வாடகை வீடுகளை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் அடைந்துள்ள நபிதுல்லா, பெஸ்ட் பேக்கரி கடைப்பகுதிக்கே வந்துவிட்டார். இனிமேல் இந்த தொழிலை மீண்டும் தொடங்குவது எனவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இவரது முதல் மனைவி யாஷ்மின் பானு, இரு வயது மகளுடன் இந்த பேக்கரியில் வசித்துவந்தார். ஆனால், பேக்கரி எரிப்பு வழக்கு தொடர்பாக மும்பையில் மறுவிசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தின் முன் சாட்சியம் சொல்ல கடந்த ஆண்டு சென்ற யாஷ்மின் பானு, அதன்பிறகு திரும்பவேயில்லை.

பெஸ்ட் பேக்கரி அருகே எவ்வித அசம்பாவித சம்பவமும் மீண்டும் நடக்கக்கூடாது என்ற நோக்கில் போலீஸ் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (தினமணி ஞாயிறு 27, மார்ச் 2005)

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு
மற்றும் தினமணி

7 comments

  1. நல்லடியார்

    //குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் VHP-யினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.//

    கடமையைச் செய்யும் வெகுசில நியாயவான்களுக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்?

  2. நிலவு நண்பன்

    Unmai Paesum pathivu…unmaiyil ezuthae aayutham

  3. இந்தியாவில்:இந்து,இந்தி,இந்தியா எனும் இனவாத,மொழிவாத,மதவாத அரசும் பார்ப்பனிய-பனியா ஆதிக்கம் பாரதிய ஜனதாவாக ஆட்சிப்பீடம் ஏறும்போது இத்தகைய கொலைகள் நிகழ்கிறது.இந்த மதவாதமானது இஸ்லாமியர்களை மட்மல்ல ஒரே மதத்தைச்சாhந்த மக்களைக்கூடச் சாதிரீதியாக அடக்கி,அவர்களை மலம் தின்னவைத்துக் கொத்தடிமையாக்கிக் கொல்கிறது. இன்று உலகே அப்பாவி மக்களின் சிறைக் கூடமாக இருக்கும்போது யாரிதைத் தட்டிக்கேட்க உரிமையுடையவர்கள்?மக்களே தமது அதிகாரத்தைக் கைகளில் எடுக்காதவரை-இவற்றைத் தடுப்பது சாத்தியமில்லை.

  4. நல்லடியார்

    //இந்தியாவில்:இந்து,இந்தி,இந்தியா எனும் இனவாத,மொழிவாத,மதவாத அரசும் பார்ப்பனிய-பனியா ஆதிக்கம் பாரதிய ஜனதாவாக ஆட்சிப்பீடம் ஏறும்போது இத்தகைய கொலைகள் நிகழ்கிறது//

    ஸ்ரீ ரங்கன்,

    R.S.S.இன் அரசியல் முகமூடிதான் பார’தீய’ ஜனதா. இவர்களுக்குள்ளும் மிதவாத (வாஜ்பாய்?), தீவிரவாத (அத்வானி, ஜோஷி,மோடி) முகமூடிகள். இவர்களின் செயல் திட்டத்தை நிறைவேற்ற காரணங்கள் தேவையில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியே. எந்த சூழலிலும், எந்த ஆட்சியிலும் தங்கள் செயல் திட்டத்தை நிறைவேற்றியே வந்துள்ளார்கள்.

  5. நல்லடியார்,தங்கள் கருத்தோடு முற்றுமுழுதான உடன்பாடு கொள்கிறேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!,விஞ்ஞானபூர்வமான கருத்து.

    நட்புடன்
    ப.வி.ஸ்ரீரங்கன்

  6. நல்லடியார்

    //விஞ்ஞானபூர்வமான கருத்து.//

    சீரியசா சொல்றீங்களா? :-{ கிண்டலா? :-))

    நட்புக்கு நன்றி ப.வி.ஸ்ரீங்கன்!

  7. நல்லடியார்,வணக்கம்!பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தைத் தாயகமாகக் கொண்டவன் நான்.மக்களின் அழிவில் கிண்டல் பண்ணுவேனா?இனப்படுகொலைகளைக் கண்ணால் பார்த்தும்,அநுபவித்தவர்கள் நாம்.எம்மால் குஜராத் படுகொலைகளின் அரசியலையும்-பொருளியல் நலன்களையும் விஞ்ஞானபூர்வமாகக் கணிக்கமுடியும்.அதை எழுத்திலும் பலவழிகளில் முன்வைத்தவர்கள்.உங்கள் கருத்துக்கள்(குஜராத் பற்றியவை)மிகவும் நேர்த்தியாக-நாம் பார்த்த,விமர்சித்த உண்மைகளைப் பேசுவதால் அதை ஆமோதித்தோம்.உண்மையும் இதுதாமே!எனவே இதுள் நிலவுகின்ற விளக்கங்கள்,தரவுகள் சமூகவிஞ்ஞானப் பின்னணியோடு பார்ப்பதற்குச் சமமானது.இதனால் அதை விஞ்ஞானபூர்வமானதெனச் சொன்னோம்.நல்லடியாரே!உங்களை ஒருபோதும் கிண்டல் செய்ய எமக்கு மனம் வராது.அந்தச் சந்தேகம் வேண்டாம்.
    நட்புடன்
    ப.வி.ஸ்ரீரங்கன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *