Index | Subscribe mailing list | Help | E-mail us

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

 

61-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَأَعُوْذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


62-أَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ اْلأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْئٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَاْلإِنْجِيْلِ وَالْفُرْقَانِ، أَعُوْذُ بِكَ مِنَ شَرِّ كُلِّ شَيْئٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَللَّهُمَّ أَنْتَ اْلأَوَّلُ، فَلَيْسَ قَبْلَكَ شَيْئٌ، وَأَنْتَ اْلآخِرُ، فَلَيْسَ بَعْدَكَ شَيْئٌ، وَأَنْتَ الظَّاهِرُ، فَلَيْسَ فَوْقَكَ شَيْئٌ، وَأَنْتَ الْبَاطِنُ، فَلَيْسَ دُوْنَكَ شَيْئٌ، اِقْضِ عَنَّا الدَّيْنَ،وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! அனைத்துப் பொருட்களின் இறைவனே! விதையையும் வித்துவையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துத் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அவற்றின் நெற்றிப்பிடி உன் ஆதிக்கத்தில்தான் உள்ளது. யாஅல்லாஹ்! நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே கடைசியானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீயே மிகைப்பவன். உனக்குமேல் எதுவுமில்லை. நீயே மறைவானவன். உனக்கு மறைவானது எதுவுமில்லை. எங்களுடைய கடனை நிறைவேற்றுவாயாக! மேலும் ஏழ்மையை விட்டும் (பாதுகாத்து, பிறர்) தேவையற்றவர்களாக ஆக்குவாயாக!


63-أَللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلاَمِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ اِلَي النُّوْرِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِيْ أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوْبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ، وَاجْعَلْنَا شَاكِرِيْنَ لِنِعَمِكَ، مُثْنِيْنَ بِهَا عَلَيْكَ، قَابِلِيْنَ لَهَا، وَأَتْمِمْهَا عَلَيْنَا.

யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களை இணைப்பாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் எங்களுக்கு ஈடேற்றம் அளிப்பாயாக! வெளிப்படையான, அந்தரங்கமான அனைத்து மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக! எங்கள் செவிப்புலன்கள், பார்வைகள், உள்ளங்கள், மனைவியர்கள், வாரிசுகள் ஆகிய அனைத்திலும் அபிவிருத்தி செய்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னை புகழ்பவர்களாக, உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக!


64-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ، وَخَيْرَ الدُّعَاءِ، وَخَيْرَ النَّجَاحِ، وَخَيْرَ الْعَمَلِ، وَخَيْرَ الثَّوَابِ، وَخَيْرَ الْحَيَاةِ، وَخَيْرَ الْمَمَاتِ، وَثَـبِّـتْـنِيْ، وَثَقِّلْ مَوَازِيْنِيْ، وَحَقِّقْ إِيْمَاِنْي، وَارْفَعْ دَرَجَاتِيْ، وَتَقَـبَّلْ صَلاَتِيْ، وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ،وَخَوَاتِمَهُ،وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ،وَظَاهِرَهُ،وَبَاطِنَهُ،وَالدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ مَا آتِيْ، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أَعْمَلُ، وَخَيْرَ مَابَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجاَتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرْ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَقَلْبِيْ، وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَارِكَ فِيْ نَفْسِيْ، وَفِيْ سَمْعِيْ، وَفِيْ بَصَرِيْ، وَفِيْ رُوْحِيْ، وَفِيْ خَلْقِيْ، وَفِيْ خُلُقِيْ، وَفِيْ أَهْلِيْ، وَفِيْ مَحْيَايَ، وَفِيْ مَمَاتِيْ، وَفِيْ عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِيْنَ

யாஅல்லாஹ்! நல்ல வேண்டுதல், நல்ல பிரார்த்தனை, நல்ல வெற்றி, நற்செயல், நற்கூலி, நல்வாழ்வு, நல்ல மரணம் ஆகிய வற்றை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக் கனப்படுத்துவாயாக! என்னுடைய ஈமானை பலப்படுத்துவாயாக! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்;றுக்கொள்வாயாக! என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! நல்ல வெற்றிகளையும், நல்லமுடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும் நல்ல துவக்கத்தையும் வெளிப்படையான, அந்தரங்கமான நல்லறங்களையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நல்லவற்றில் ஈடுபடவும், நல்லவற்றைத் தூண்டவும், நல்லவற்றைசெய்யவும், அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நான் செய்யும் திக்ரை உயர்த்துமாறும் என்னுடைய பாவத்தை மன்னிக்குமாறும் என்னுடைய பிரச்சனைகளை சீராக்குமாறும் என்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும் என்னுடைய மர்மஸ்தானத்தை பத்தினித்தனமாக ஆக்குமாறும் என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்கு மாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு, மரணம், செயல் ஆகிய வற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக!. சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளைக் கேட்கிறேன். தந்தருள்வாயாக!


65-أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ، وَاْلأَهْوَاءِ، وَاْلأَعْمَالِ وَاْلأَدْوَاءِ

யாஅல்லாஹ்! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக!


66-أَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيْهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ

யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த ரிஸ்கை -அருட் கொடைகளை- எனக்கு போதுமானதாக்கி, அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் -அருட்கொடைகளுக்கு- பகரமாக அதைவிட சிறந்த வற்றை எனக்குத் தருவாயாக!


67-أَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا .

யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!


 

துஆ

எண்

ஆதார நூல்

61

இப்னுமாஜா

62

முஸ்லீம்

63

ஹாகிம்

64

ஹாகிம்

65

ஹாகிம்

66

ஹாகிம்

67

ஹாகிம், திர்மிதி

 

திக்ரின் சிறப்புகள்