Index | Subscribe mailing list | Help | E-mail us

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல்
 

அல்லாஹ் தனது படைப்பினங்களில் அவன் நாடியவற்றின்மீது சத்தியம் செய்வான். ஆனால் படைப்பினங்களாகிய நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யக் கூடாது.
பலர் அல்லாஹ்வின் படைப்பினங்களின் மீது சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யப்பட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்  எதுவும் கிடையாது. அவனே மகத்தானவன், மேன்மைமிக்கவன், அமைத்தையும் நன்கறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.


أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுடைய தந்தையரின் மீது சத்தியம் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தடுக்கின்றான். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது -வாய் மூடி- மௌனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 6108)

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக -அல்;லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத் 2829)

مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا
அமானிதத்தின் மீது சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவனல்ல. (அறிவிப்பவர்: அபூபுரைதா(ரலி) நூல்: அபூதாவூத் 2831)


கஃபாவின் மீதோ  அமானிதம்  கண்ணியம்  உதவி  இன்னாரின் பரகத்  இம்மனிதரின் வாழ்நாள்  நபி(ஸல்)அவர்களின் மேன்மை  அவ்லியாக்களின் கண்ணியம் ஆகியவற்றின் மீதோ  தாய் தந்தையின் மீதோ  குழந்தையின் தலைமீது கை வைத்தோ அல்லது இவையல்லாத இதுபோன்ற முறைகளிலோ சத்தியம் செய்வது ஹராம்ஆகும். இவ்வாறு யாரேனும் சத்தியம் செய்து விட்டால் அதன் பரிகாரமாக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
சத்தியம் செய்பவன் தனது சத்தியத்தில் லாத்  உஸ்ஸா(என்ற சிலைகளின் பெயரைக்) கூறினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 4860)


இது போன்றே ஷிர்க்கான  ஹராமான பல வாசகங்களை முஸ்லிம்களான நம்மில் பலர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில இதோ:


அல்லாஹ்வுடன் பிறரை இணைத்தல்:
1)அல்லாஹ்வைக் கொண்டும் உங்களைக் கொண்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
2)நான் அல்லாஹ்வின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
3)இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்ததாகும்.
4)எனக்கு அல்லாஹ்வையும் உங்களையும் தவிர வேறு எவருமில்லை.
5)எனக்கு வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீங்களும் இருக்கின்றீர்கள்.
6)அல்லாஹ்வும் இம்மனிதரும் இல்லையெனில்.....
7)நான் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிட்டேன்.
8)இயற்கை நாடி விட்டது!


காலத்தைத் திட்டுதல்:
காலத்தின் அழிவே! கஷ்டமே! -இது கெட்ட நேரம்  இது கஷ்டகாலம். -இது மோசடி நேரம். என்று கூறுவது (ஏனெனில் காலத்தோடு தொடர்புடைய இவ்வாசகங்கள் அனைத்தும் காலத்தைச் சுழலச் செய்கின்ற அல்லாஹ்வையே குறிக்கின்றன)
 

தவறான பெயரிடுதல்:
அடிமைத்துவ வாசகங்களை படைப்பினங்களுடன் இணைப்பது  உதாரணமாக  அப்துல்மஸீஹ்  அப்துன் நபி  அப்துல் ரசூல்  அப்துல் ஹுஸைன் என்று பெயரிடுவது.
மேற்கூறப்பட்டுள்ளதைப் போன்ற அனைத்தை விட்டும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

 

தொழுகையில் அமைதியின்மை