Index | Subscribe mailing list | Help | E-mail us

அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல்
 

மனிதனை குழப்பத்தில் ஆக்குவதிலும் ஹராமில் விழச்செய்வதிலும் ஷைத்தான் மிக ஆர்வமாக உள்ளான். இதனால் தான் அல்லாஹ் நம்மை இவ்வாறு எச்சரிக்கின்றான்.


விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான்.... (அல்குர்ஆன் 24:21)


ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச் செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று. இதனால்தான் மார்க்கம் இப்பாதையை அடைக்கிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான். (அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அஹமத்)


இன்றைய தினத்திற்கு பிறகு தனித்திருக்கும் பெண்ணிடம் தன்னுடன் ஒருவரோ இருவரோ இல்லாது -தனிமையாக- செல்லக்கூடாது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்)


சகோதரனின் மனைவி, வேலைக்காரப் பெண் மற்றும் இவர்கள் போன்ற எந்த அன்னியப்பெண்ணுடனும் வீட்டிலோ, அறையிலோ, வாகனத்திலோ தனித்திருத்தல் கூடாது. நோயாளியான பெண் மருத்துவருடனோ, அல்லது அந்நிய ஆணுடனோ தனித்திருப்பது கூடாது. அதிகமானோர் தனது மனக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்தோ, அல்லது பிறர் மீது நம்பிக்கை வைத்தோ இதில் அலட்சியமாக உள்ளனர். மார்க்கத்திற்கு புறம்பான இந்த நம்பிக்கையே மானக்கேடான பல செயல்களுக்கு காரணமாக அமைகிறது. மேலும் வாரிசில் கலப்படம் ஏற்படுவதற்றும் விபச்சாரக் குழந்தை பிறப்பதற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.

 

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்