நபி(ஸல்) அவர்கள்
பித்அத்துக்களை விவரிக்கும் போது
குல்லு பித்அத்தின்
ளலாலத்துன் என்றே கூறினார்கள்.
குல்லு
என்றால் "எல்லாம்" என்பது பொருள்.
குல்லு பித்அத்தின்
ளலாலத்துன் என்றால் எல்லா
பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை
மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று
கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது
சிந்தித்துப் பார்க்கட்டும்!
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்)
அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம்
என்று சொல்வது, செய்வது "பித்அத்" ஆகும்.
அல்லாஹ், மற்றும் அவனின்
தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில்
புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம்
பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப்
படமாட்டாது
யார் இந்த மார்க்கத்தில்
இல்லாத ஒன்றை புதிதாக
உருவாக்குகின்றாரோ
அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,
முஸ்லிம்)
யார் இந்த மார்க்கத்தில்
இல்லாத ஒன்றை புதிதாக
செய்கின்றாரோ
அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
இவ்விரு நபிமொழிகளிலிருந்தும்
பித்அத்தான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது
நமக்கு தெளிவாக விளங்குகின்றது.
எல்லா
பித்அத்தும் வழிகேடாகும்
இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை)
உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக
ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
இன்னும் ஒரு அறிவிப்பில்
அனைத்து வழிகேடும் நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும் வந்திருக்கின்றது.
எல்லா பித்அத்துகளும் வழிகேடு
என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருந்தும், இன்று முஸ்லிம்களில் சிலர்,
எல்லா பித்அத்தும் வழிகேடல்ல, கெட்ட பித்அத்துக்கள்தான் வழிகேடாகும், நல்ல
பித்அத்துக்கள் வழிகேடல்ல என்று பித்அத்துக்களை இரண்டாக பிரிப்பதுதான்
ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும்.
நபி(ஸல்) அவர்கள்
பித்அத்துக்களை விவரிக்கும் போது
குல்லு பித்அத்தின்
ளலாலத்துன் என்றே கூறினார்கள்.
குல்லு
என்றால் "எல்லாம்" என்பது பொருள்.
குல்லு பித்அத்தின்
ளலாலத்துன் என்றால் எல்லா
பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை
மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று
கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது
சிந்தித்துப் பார்க்கட்டும்!
அவர்கள்
எடுத்து வைக்கும் ஆதாரங்கள்?
1.
யார் இஸ்லாத்தில் நல்ல ஒரு காரியத்தை ஆரம்பிக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய
நன்மையும், (அவருக்குப் பின்) செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கும்
இவருக்கு உண்டு. ஆனால் அவர்களின் நன்மையில் ஏதும் குறைக்கப்படமாட்டாது என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
அவர்கள்
தரும் விளக்கம்: இந்த ஹதீஸில்
நபி(ஸல்) அவர்கள், புதிதாக நல்ல காரியத்தை இஸ்லாத்தில் ஆரம்பிக்கலாம் என அனுமதி
அளித்திருக்கின்றார்கள். ஆகவே நல்ல பித்அத்தைச் செய்வது ஆகுமானதாகும்.
நாம்
கொடுக்கும் விடை: இது நீளமான
ஹதீஸின் ஒரு பகுதியாகும். அந்த ஹதீஸை முழுமையாகப் படித்தால் தெளிவு கிடைத்து விடும்.
அதாவது நபி(ஸல்) அவர்களிடத்தில் மிக வறுமை நிலையில் சில நபித் தோழர்கள் வந்தார்கள்.
அதைப்பார்த்த நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களைப் பார்த்து, அவர்களுக்கு தர்மம்
செய்யும்படி வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித் தோழர் தன் வீடு சென்று தன்
கை நிரம்பிய அளவு வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தார்.
இதைப்பார்த்த மற்ற நபித் தோழர்களும் தங்கள் வீடுகளுக்குச் சென்று உணவு மற்றும்
ஆடைகளைக் கொண்டு இரு குவியல்களாகக் குவித்தார்கள். இப்போதுதான் நபி(ஸல்) அவர்கள்
மேற் கூறிய வார்த்தையைக் கூறினார்கள். அதாவது ஒரு நல்ல செயலை முதலில் யார்
செய்கின்றாரோ அவரைப் பார்த்து செய்பவர்களின் நன்மையில் ஒரு பங்கு இவருக்கும்
கிடைக்கும். இதுதான் அந்த வார்த்தையின் விளக்கமாகும். நல்ல பித்அத் கெட்ட பித்அத்
என்பதற்கு இங்கே எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் ஏவியதைச் செய்வது எப்படி
பித்அத்தாகும்?
2.
உமர்(ரலி)
அவர்கள் "இது நல்ல
பித்அத்" எனக் கூறினார்கள். (முஅத்தா)
அவர்கள்
தரும் விளக்கம்: நல்ல பித்அத்
இருப்பதினால்தான் இப்படி உமர்(ரலி)
அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
நாம்
கொடுக்கும் விடை: இது உமர்(ரலி)
அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு
சம்பவமாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தராவீஹ் தொழுகையை மூன்று நாட்கள்
ஜமாஅத்தாகத் தொழவைத்தார்கள். அது பர்ளாக்கப்பட்டு விடும் என்பதால் அவர்களின் மரணம்
வரைக்கும் பின்பு ஜமாஅத்தாக மக்களுக்குத் தொழவைக்கவில்லை. நபியவர்களின்
மரணத்திற்குப் பிறகு அபூபக்ர்(ரலி)
அவர்களின் ஆட்சி காலத்திலும் அப்படியே
விடுபட்டிருந்தது. உமர்(ரலி)
அவர்களின் ஆட்சி வந்த போது மக்கள் தராவீஹ்
தொழுகையை தனிமையில் தொழுவதைப் பார்த்து, இவர்களை ஒரு ஜமாஅத்தாகத் தொழ வைத்தால்
நன்றாக இருக்குமே என்று நினைத்து, உபை இப்னு கஃபு, தமீமுத் தாரி(ரலி) என்னும் இரு
நபித் தோழர்களை இமாமாக ஆக்கி, அவர்களுக்குப் பின் மக்கள் ஒரு ஜமாஅத்தாக
ஒருங்கிணைந்து நின்று தொழுததைப் பார்த்து விட்டே
இது நல்ல பித்அத்து
என்றார்கள்.
இதை வைத்து நல்ல "பித்அத்",
கெட்ட "பித்அத்" இருக்கின்றது என்று கூற முடியாது. காரணம் நபி(ஸல்) அவர்கள் மூன்று
நாட்கள் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழவைத்திருக்கிறார்கள். நபியவர்கள் செய்ததைச் நாம்
பின்பற்றுவது எப்படி பித்அத்தாகும்.? அப்படியானால் ஏன் உமர்(ரலி)
அவர்கள் இது
நல்ல பித்அத் என்று
கூறினார்களென்றால்,
பித்அத்
என்ற அரபு வார்த்தைக்குரிய நேரடி கருத்தை வைத்தே.
பித்அத்
என்ற அரபு வார்த்தைக்கு புதியது என்ற அர்த்தமாகும். நீண்ட காலமாக விடுபட்டிருந்த
சுன்னத்தை புதுப்பித்திருப்பது நல்லது என்ற அர்த்தத்தில்தான் அப்படி கூறினார்களே
தவிர, நபியவர்கள் தடுத்த பித்அத்தைப்பற்றி அல்ல. அதாவது நீண்ட காலமாக மக்கள்
தனித்தனியாக தொழுததை விட ஒரு ஜமாஅத்தாக இன்று மக்கள் தொழுவது நன்றாக இருக்கின்றதே
என்ற அர்த்தத்தில்தான்.
3.
மாடிக் கட்டிடங்கள் கட்டுவது, விமானத்தில் மற்றும் வாகனங்களில் பிரயாணம் செய்வது
இன்னும் இவைகள் போன்றவைகள்.
அவர்கள்
தரும் விளக்கம்: இவைகள் அனைத்தும்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. மாறாக புதிதாக உருவானவைகள்தான். இவைகளை
உபயோகிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆகவே நல்ல பித்அத்தை செய்வது ஆகுமாகும்.
நாம்
கொடுக்கும் விடை: இஸ்லாத்தில் ஒன்றை
புதிதாக உருவாக்குவதற்குத்தான் பித்அத் என்று சொல்லப்படும். மாடிக்கட்டிடத்தை,
விமானத்தை, வாகனங்களை ஆதாரமாகக் காட்டுவது, பொருத்தமற்ற ஒன்றாகும். இவைகள்
மார்க்கத்தோடு சம்மந்தப்பட்டவைகளும் அல்ல.
பித்அத்தினால் ஏற்படும் விளைவுகள்
1.
முஸ்லிம் சமுதாயத்திற்குள் பல தவறுகள் ஊடுருவதற்கு மிகப் பெரும் காரணம்.
2.
பித்அத் செய்பவர் பித்அத்தை விடாதவரை அவருடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தர்கீப், வதர்கீப்)
3.
மறுமையில் கவ்தர் தடாகத்தின் தண்ணீரை அருந்த விடாமல் அவர் தடுக்கப்படுவார். (புகாரி)
நபியவர்களை நேசிப்பது எப்படி?
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது
அனைத்து முஃமின்களின் மீது கடமையாகும். தன் உயிரை விடவும் நபி(ஸல்) அவர்களை
நேசிக்காதவர் உண்மை முஃமினாக முடியாது. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அவர்கள்
கொண்டு வந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவதாகும்.
யார் என்னை நேசிக்கின்றாரோ
அவர் என் வழிமுறைகளை பின்பற்றட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)
எதையாவது ஒன்றை நான்
உங்களுக்கு ஏவினால், அதில் முடியுமானதைச் செய்யுங்கள். ஏதாவது ஒன்றை நான் உங்களை
விட்டும் தடுத்தால் அதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நஸாயி)
நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை
முழுமையாக பின்பற்றி, அவர்கள் தடுத்த அனைத்தையும் தடுத்து நடக்க நம் அனைவருக்கும்
அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.
|