ஃபிக்ஹ் என்பது இஸ்லாமிய சட்டம்
சம்மந்தப்பட்ட கலைக்கு சொல்லப்படும்.
இக்கலையை
இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. இஸ்லாமிய சட்டத்தை ஆழமாக
ஆராய்ந்து சட்டங்களை பிரித்தெடுப்பது. இந்த ஆராய்ச்சியில் பெரும்
அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள்.
2. இஸ்லாமிய அடிப்படை சட்டங்களை தெரிந்துக் கொள்வது. இதில் நம்
போன்றவர்கள் அடங்குவார்கள். இந்த இரண்டாவது வகையைத்தான் நாம் இங்கு
தெரிந்துக் கொள்ளப் போகின்றோம்.
மார்க்க
சட்டக்கலையை தெரிந்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் கடைப்பிடிக்க
வேண்டியவை:
1. சட்டம் சம்மந்தப்பட்ட
புத்தகங்களை சேகரிப்பது.
2. சட்டக்கலையில் கோர்வை செய்யப்பட்ட புத்தகங்களைத் தெரிந்து
கொள்வது.
3. சட்டக்கலை சம்மந்தமாக சுருக்கமாக எழுதப்பட்ட புத்தகங்களை
முதலில் படிப்பது.
4. சட்டக்கலை தெரிந்த அறிஞரிடம் அதிக தொடர்பு வைத்துக் கொள்வது.
5. ஆசிரியரிடம் படிப்பதற்கு முன் படிக்கப்போகும் பாடத்தை ஒரு
தரமாவது படித்துக் கொண்டு செல்லுதல்.
6. படித்ததற்கு பின் பாடத்தை மீட்டிக்கொள்ள வேண்டும்.
7. அறிவைக் கற்கும் போது அதற்காக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
8. படித்ததைக் கொண்டு அமல் செய்ய வேண்டும்.
9. தாம் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
சுத்தம் |