13.
நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை |
1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உ@ச்
செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ
2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத
அளவுக்கு பல் துலக்குவதை நான் பாhத்திருக்கிறேன் என ஆமிர் இப்னு
ரபீஆ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது
பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். ஆதாரம்:
புகாரி
விளக்கம்: பல் துலக்குவது நபியவர்கள்
மிகவும் வலியுறுத்துகின்ற நடைமுறையாகும். இதனை நோன்பிலும் நோன்பு
அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல்
துலக்குவது கூடாது, அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது
என்று கூறுவது ஆதாரமற்றதாகும்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|