16.
பெருந்தொடக்குள்ள பெண்கள் |
1) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது(மாதவிடாய் காரணமாக) சுத்தம்
இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்)
சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபியவர்கள்
எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி
ஏவமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:
திர்மிதீ
விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும்
பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது,
சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப்
பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|