21.
நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள் |
1) யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு
கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும்.
அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த
அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க
வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு போPத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு
திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின்
வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|