وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ
حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ
آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
இன்னும் நீங்கள்
பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன்
கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை(வரம்புகளை மீற)
நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து
பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத்
தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி(ஸல்)அவர்கள் இஃதிகாஃப்
இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
2) நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமளான் மாதத்தின் கடைசிப்
பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள்
மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள. ஆதாரம்:
புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப்
இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப்
இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம்
விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக
எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி
விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:
புகாரி, முஸ்லிம்
விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை
வணங்கிவழி படுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும்,
நோன்பு காலத்திலும் நோன்பு இல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம்.
நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி(ஸல்) அவர்கள்
ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப்
இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப்
இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற
அவசியத் தேவைக்கின்றி வெளியில் செல்லக்கூடாது, நோன்பின்
கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து
கொள்ளலாம். எவருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|