Index |Subscribe mailing list | Help | E-mail us

அல்-ஜுபைல் மாநகரில் நடைபெற்ற

இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி

இப்னு ஷேஃக்

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

கடந்த 15-11-2007 அன்று மாலை அல்-ஜுபைல் மாநகரில் வணிகத் துறைமுக முகாமில் அமைந்திருக்கும் பள்ளி வளாகத்தில், "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. அல்-ஜுபைல் அழைப்பு மையத்தைச் சார்ந்த மௌலவி முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் சரியாக 8:00 மணியளவில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்கள்.


அதனை தொடர்ந்து அல்-ஹாஸாவிலிருந்து வருகைத் தந்திருந்த மௌலவி அலாவுத்தீன் பாக்கவி அவர்கள், "இஸ்லாமும் இந்து மதமும்" என்ற தலைப்பில் தனக்கே உரிய நகைசுவை உணர்வுடன் அருமையான உரையை வழங்கினார்கள்.


உரையினை தொடர்ந்து இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பற்றிய கேள்விகளுக்கு மிக அழகான முறையில் பதில் கூறினார். அதில் மிகவும் கவர்ந்தது முஸ்லிம் அல்லாதவர்கள் புனித வேத நூலான குர்ஆனை தொடவும் படிக்கவும் கூடாது என்றும் அதனை தனக்கு தரமறுப்பதாகவும் கூறிய சகோதரை அழைத்து அவருக்கேற்ற பதிலும் தந்து அல்-ஜுபைல் அழைப்பகம் சார்பாக திருக்குர்ஆன் (தமிழ் மொழிபெயர்ப்புடன்) வழங்கப்பட்டது.

இரவு சுமார் 10:30 மணியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அதனை தொடர்ந்து நிகழ்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜுபைல் அழைப்பகம் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது. அதே போல் கேள்வி கேட்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்ட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அழைப்புப் பணி உதவியளார்கள் பல்வேறு குழுக்களாக பல்வேறு முகாம்களுக்கு சென்று நிகழ்ச்சிக்காக களப்பணியாற்றினார்கள். வழக்கம் போல் அழைப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்
Star of Kingdom Services (SKS) நிறுவனம் தேனீர் தயாரித்து வழங்கினார்கள்.

இறுதியாக அல்-ஜுபைல் அழைப்பகம் சார்பாக அலாவுத்தீன் பாக்கவி அவர்களுக்கு முஹம்மத் ஜலீல் மதனி பரிசு வழங்கி கவுரவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்!

 

புகைப்படங்கள்: