அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
திருப்பெயரால்.
"அல்-ஜுபைல்
அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (அல்-ஜுபைல் அறக்கட்டளை)"
கடந்த 10-08-2007 அன்று மிகப் பெரிய பட்டிமன்றத்தை
நடத்தி முடித்தது. இதற்காக வாரங்களாக தமிழ்பிரிவின் அழைப்பு பணி
உதவியாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பல்வேறு முகாம்களுக்கு சென்று
தமிழ் பேசும் அன்பர்களுக்கு இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
வழங்கியிருந்தார்கள்.
10-8-2007 அன்று சுமார் 3 மணிமுதல் அல்-ஜுபைல் தொழில்சாலை நகரத்தில்
அமைந்திருக்கும்
(Royal Commission RC Camp-2)
ராயல் கமிஷன் முகாம்-2ல்
தமிழ் பேசும் அன்பர்கள் ஒன்று கூடத்
தொடங்கியிருந்தார்கள். அஸர் தொழுகை முடிந்த சில நிமிடங்களில்
நிகழ்ச்சியை அறக்கட்டளையின் அழைப்பாளர் சகோ. UK ஜமால் முஹம்மத் மதனி
அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முதல் அம்சமாக
பேச்சுப் போட்டி தொடங்கியது.
வட்டி, வரதட்சணை, போதைப்பொருள், விபச்சாரம் மற்றும் சூது ஆகிய
தலைப்புகளில் இந்தியா மற்றும் இலங்கையைச்
சேர்ந்த தமிழ் பேசும் அன்பர்கள் தங்களின்
கருத்துக்களை நகைச்சுவை உணர்வோடு
மன்றத்தில் பதிய வைத்து
மக்களை சிந்திக்க வைத்தார்கள்.
இதனைத்
தொடர்ந்து சரியாக 5:45 மணியளவில் பட்டிமன்றம் தொடங்கியது.
அல்-ஹஸா நகரிலிருந்து வருகை
தந்திருந்த சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்களை நடுவராக
பங்கு வைத்தார். "பிள்ளைகளை
சீர்படுத்துவதற்கு பெரிதும் பங்களிப்பவர்கள் பெற்றோர்களே"
என்ற தலைப்பில் அறக்கட்டளை அழைப்பாளார் சகோ.
ஜமால் முஹம்மத் மதனி தலைமையில் மூன்று பேரும், "பிள்ளைகளை
சீர்படுத்துவதற்கு பெரிதும் பங்களிப்பவர்கள்
ஆசிரியர்களே" என்ற
தலைப்பில் அறக்கட்டளையின் அழைப்பாளர் சகோ. முஹம்மத் ஜலீல் மதனி
அவர்கள் தலைமையில் மூன்று பேரும் பங்குப்
பெற்றனர்.
கற்பனையான விஷயங்களை உள்ளடக்கி நகைசுவை உணர்வோடு பேசுவதுதான் பட்டி
மன்றம் என்ற நிலையை மாற்றி, அதனை மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில்
நடத்த இயலும் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்ல சான்றாக
அமைந்திருந்தது. இறுதியாக இருதரப்பு வாதங்களையும்
வைத்து பிள்ளைகளை சீர்படுத்துவதற்கு
பெரிதும் பங்களிப்பவர்கள் பெற்றோர்களே பெற்றோர்களே பெற்றோர்களே என்று
தீர்ப்பை வழங்கி பட்டிமன்றத்தினை சரியாக 10:30 மணியளிவில் முடித்து
வைத்தார்.
சிறப்பம்சங்கள்:
நிகழ்ச்சின்போது சுவையான தேனீருடன் சுண்டல் வழங்கப்பட்டது.
சுவையான இரவு உணவு நிகழ்ச்சியின் இறுதியில் பரிமாறப்பட்டது.
பேச்சுப் போட்டியில் முதல்
பரிசாக சைக்கிளும்,
இரண்டாவது பரிசாக மொபைலும்,
மூன்றாம் பரிசாக ரிஸர்சபிள்
லைட்டும் வழங்கப்பட்டன. இது தவிர பேச்சுப்
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள்
வழங்கப்பட்டன.
பட்டி மன்ற நடுவருக்கும் இரு அணியின்
சார்பாக கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து விடுதியிலிருந்தும் நிகழ்ச்சிக்கு
செல்ல வாகன வசதிகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. சுமார் 300-க்கும்
அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க அறக்கட்டளையைச்
சார்ந்தது. இறுதியில் அழைப்பாளார் சகோ.
அஸ்ஹர் ஸீலானி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி
இனிதே முடிவடைந்தது. (அல்ஹம்துலில்லாஹ்
- எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!)
|