இந்தியாவை ஆட்சி புரிந்த முகலாய மன்னர்களில் அக்பரும் ஒருவராவர். இவரது ஆட்சி, இஸ்லாமியக் கொள்கைகளை
காற்றில் பறக்கவிடப்பட்டு சிலரை திருப்தி
படுத்தும் விதத்தில் இருந்ததால் அக்பரையும், அவரது ஆட்சி
காலத்தையும் வானாளாவிய புகழ்ந்து சிறந்த ஆட்சி செய்த ஒரு முஸ்லிம்
மன்னர் என்று இந்து வரலாற்று ஆசிரியர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இயற்கையிலேயே முஸ்லிம்களை கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்திய
இந்து வெறியர்கள், முஸ்லிம்கள் மீது துவேஷத்தை கிளப்பிக் கொண்டிருக்க
வேண்டும் என்று கருதும் இந்து வெறியர்கள் ஒரு முஸ்லிம் மன்னரை புகழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு பின்னணி இருக்க வேண்டும்.
அபுல் கலாம் என்பவரை இந்திய முதல்
குடிமகனாக, பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சி செய்தபோது
தேர்ந்தெடுத்ததன்
நோக்கம் என்ன? இஸ்லாமிய
சமுதாயத்திற்கு பிரிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலா?
இல்லை. "ஒரு முஸ்லிம் இந்திய குடியரசு தலைவராக ஆகும் தகுதியை, உரிமையை
தந்துள்ள நாங்களா முஸ்லிம்களின் விரோதிகள்? "இல்லை இல்லை. நாங்கள்
அவர்களது நண்பர்கள்" என்று உலக அரங்கில் காட்டிக் கொள்ள வேண்டும், அதே
நேரத்தில் அவர் ஒரு பெயர்தாங்கி முஸ்லிமாக இருக்க
வேண்டும், இந்து கலாச்சாரத்தை மனதார ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்
என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். இது நீண்ட காலமாக இந்து
வெறியார்களால் கடைபிடிக்கப்படும் ஒரு ஃபார்முலா, இது ஒரு
சதித்திட்டம்.
இந்தியக் குடியரசு தலைவர் அபுல் கலாம்
அவர்கள், தனது பேட்டியில்
"நான் இந்து வேதமான பகவத் கீதை
முழுவதையும், இதிகாசங்களான இராமாயனம், மகாபாரதம் ஆகிவற்றையும்
படித்துப் பார்த்துள்ளேன்" என்று பேட்டி அளித்துள்ளார். தனக்கு
வழிகாட்டியாக பகவத்கீதையை ஆக்கிக் கொணடேன் என்று பகிரங்கமாக கூறும்
குடியரசு தலைவர் ஐயர் அபுல் கலாம் அவர்கள் குடியரசு தலைவர் பதவிக்கு
போட்டியிடுவதற்கு முன்பு பல கோயில்களுக்கு சென்று, அங்குள்ள
பூசாரிகளிடம் ஆசிர்வாதம் பெற்று, தனது வெற்றிக்கு அதுவும் போதாது என்று
கருதி, சங்கராச்சாரியிடம் சென்று கூணி குறுகி மண்டியிட்டு அமர்ந்து
ஆசிர்வாதம் பெற்றதை உலகமக்கள் அறிவர்.
இந்த
ஐயர் அபுல் கலாம் அவர்கள் குர்ஆனைப் படித்துப்பார்த்ததாக ஒரு
பேட்டியிலும் குறிப்பிட வில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய
விஷயமாகும். அவ்வாறு கூறுவதை தனது தகுதிக்கு இழுக்கு என்று கருதுகிறார்
போலும். "இந்த அபுல் கலாமைப்போன்று தான் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு
முஸ்லிமும் இருக்க வேண்டும்" என்று
இந்து வெறியர்கள் உபதேசம் செய்கிறார்கள்.
ஒரு முஸ்லிமை இந்திய இந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில்,
இந்துக்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவன்
சரியான இந்திய முஸ்லிமாக கருதுப்படுவதில்லை.
இதே காரணம்தான்
அக்பரை இவர்கள் புகழ்வது.
முகலாய மன்னர் அக்பரை இந்து வெறியர்கள் மனதார புகழ வேண்டும் என்றால்
அவரது ஆட்சி அந்த இந்து வெறியர்களை திருப்திபடுத்தும் வகையில்
இருந்திருக்க வேண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
அந்த செய்திகளைத்தான் இந்திய வரலாற்று ஏடுகளில் காண முடிகிறது.
முகலாய மன்னர் அக்பர், இஸ்லாமிய கொள்கையில் வெறுப்படைந்து, அது எல்லா
மக்களாலும் பின்பற்ற தகுதியானதாக இல்லை என்ற கருதி தனது ஆட்சி
காலத்தில் 1526 ம் ஆண்டில் "தீன் இலாஹி" என்ற புதிய கொள்கையை
உருவாக்கினார். ஒரு முஸ்லிம் என்றைக்கு
குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது போதனைகளையும்
புறக்கனித்துவிடுகிறானோ அவன் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டே
வெளியேறிவிடுகிறான்.
"தீன் இலாஹி" என்ற தனது புதிய கொள்கையை மக்கள் மீது தினித்த முகலாய
மன்னர் அக்பர், தலைப்பாகையை கையில் ஏந்தியவர்களாக தனது காலில் விழுந்து
தன்னை வணங்க வேண்டும் என்று அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு
ஆணைபிறப்பித்தார். அவ்வாறு காலில் விழும் அவர்களுக்கு தனது
உருவப்படத்தை பரிசாக அளித்தார். இவ்வாறு ஒரு சர்வாதிகாரியாக விளங்கிய
அக்பர் இன்னொரு ஃபிர்அவ்னாக தன்னை கற்பனை செய்து கொண்டார் என்றுதானே
விளங்குகிறது.
வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை வணக்கம் செலுத்தினால் போதும்
என்றும் போதனை(?) செய்து வந்தார் அந்த அக்பர் பேரரசர்.
மேலும் அக்பர் தனது கொள்கையை
ஏற்றுக்கொண்டவர்களுக்கு இட்ட கட்டளைகள்:
1. பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும்.
2. பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
3. இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யலாம்.
4. எரிக்கும் போதோ புதைக்கும் போதோ தலை கிழக்கு திசை நோக்கி இருக்க
வேண்டும்.
5. இறைச்சிக் கடைக்காரர், மீனவர்கள், பறவைகளைப் பிடிப்பவர் ஆகியோரின்
பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த கொள்கையை உடைய முகலாய மன்னர் அக்பர் எவ்வாறு முஸ்லிமாக இருக்க
முடியும் என்று வாசகர்களே! சிந்தித்துப்பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகப்பெரும் செல்வாக்கு மிக்க தன்னிகரற்ற
ஆட்சித் தலைவராக திகழ்ந்தார்கள். அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
ஒரு நபித்தோழர் தங்களது காலில் விழுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்ட போது அதனை கடுமையாக எதிர்த்து, அது போல் எந்த
மனிதருக்கும் காலில் விழக் கூடாது என்று ஆணை பிறபித்தார்கள். தான் வரும்
போது அமர்ந்திருக்கும் யாரும் தனது வருகைக்காக எழுந்திருக்கவும் கூடாது
என்று சொன்ன ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான். அவர்
கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த ஒரு முஸ்லிமும் அவன்
எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் தனது காலில் விழுந்து தன்னை
வணங்க வேண்டும் என்று கூற அனுமதியில்லை. அவ்வாறு செய்பவன் இஸ்லாத்தை
விட்டும் வெளியேறி நரக வாசிகளில் ஒருவனாகிவிடுவான்.
وَمَنْ
يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي
الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (آل عمران)
"இன்னும் இஸ்லாமல்லாத ஒன்றை மார்க்கமாக எவராவது தேடினால், அப்போழுது
அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படமாட்டாது, மேலும் மறுமையில் அவர்
நஷ்டமடைந்தோரில் இருப்பார்"
(அல் குர்ஆன்: 3:85)
இஸ்லாமிய மார்க்கமல்லாத ஒரு வழியினை தனது மார்க்கமாக ஆக்கிக் கொண்டவன்
இறைவனிடத்தில் ஏற்புடையவன் அல்ல, மறுமையில் மிகப்பெரும்
நஷ்டத்திற்குள்ளாவன் என்று குர்ஆன் கூறுகிறது.
நேர்மையாகவும், நீதி தவறாமலும் ஆட்சி செய்து வந்த முகலாய மன்னர்
ஒளரங்கசீப் அவர்களையும், மன்னர் திப்பு சுல்தான் அவர்களையும் பற்றி
வரலாறு எழுதியவர்கள், அவதூறான செய்திகளையும், இல்லாத பொல்லாத
தகவல்களையும் எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் தீவிரவாதிகள்,
இந்துகளுக்கு எதிரானவர்கள் என்ற நச்சு சிந்தனையை இள
உள்ளங்களில்
ஏற்படுத்தி, அதன் மூலம் இந்து-முஸ்லிம் விரோதம் வளர்ந்து வேரூன்ற
வேண்டும் என்று கருதிவருகிறார்கள் சங்பரிவாரங்கள். அவர்களது
சூழ்ச்சிகளை அவர்களுக்கே எதிராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்வோம்.
இவ்வாறு இந்துகளால் திரித்து எழுதி வைக்கப்பட்ட வரலாறுகளை படித்த
இஸ்லாமிய அறிவு ஞானம் சிறிது கூட இல்லாத பல முஸ்லிம்கள், அக்பர் ஒரு
சிறந்த முஸ்லிம் என்று கருதிக் கொணடு அவர் கண்ட புதிய மார்க்கமான
"தீன்
இலாஹி" என்ற வார்த்தையை தங்களது கடிதங்களில், முக்கிய விஷயங்களில்
எழுதி வருகிறார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இஸ்லாத்தை
விட்டே வெளியேற்றும் செயல் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு செய்து
வருபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி அந்த பழக்கத்தை கை விட்டுவிட்டு,
இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த
பாவங்களை மன்னித்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
ஆதார நூல்:
Indian Affairs,
Hostory Of Akbar, Period
of 1526 Year. |