Index |Subscribe mailing list | Help | E-mail us

வாகனத்தை அதிக காலம் உழைக்கச் செய்வது எப்படி?
- அபூ சல்மா B.E., M.B.A.

 

வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் பின்வருவனவற்றில் கவனம் தேவை:-

1. உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான காற்று அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

2. வாகனத்தை
'Start' செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் நிறுத்துவது சிறந்தது.

3. சரியான வேகத்திற்கேற்ற
Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake செய்யும்பொழுது சீரான முறையில் Brake-ஐ அழுத்தவும். அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரில் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

4. தேவையில்லாமல் கிளட்ச்சியோ (
Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவழிப்பை தடுக்கலாம். Signal போன்ற இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

5. உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (
vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு அல்லாமல் Vibration (படபடப்பு) தவிர்த்து Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைதல் போன்ற பயன்களை பெறலாம்.

பின்வருவனவற்றில் வாகனத்தின் சில முக்கிய
Maintenance service பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு
Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine Oil-யின் தரம் பொறுத்தது ஆகும். இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிரூட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் அதுப்போல் Oil Filter-யை குறைந்தது ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை
Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள்.


Automobile மெக்கானிக் வெர்க்ஷாப் செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


ஒழுங்கான பராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல் இனிய பயணமாக அமைய உதவும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பயணங்களை இனிமையானதாக ஆக்குவானாக!
 

படியுங்கள் பரப்புங்கள் : "சுவனப்பாதை" மாதஇதழ், - வெளியீடு: ஜித்தா, ஸனாயிய்யா, சவுதி அரேபியா