Index |Subscribe mailing list | Help | E-mail us

ஹிஜ்ரா நாட்காட்டி 1428 - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்

P.முஹம்மத் சிராஜுதீன்

 

இஸ்லாமிய சமுதாயமே!

 

இஸ்லாமிய கடமைகளில் மூன்றாம் இடம் வகிக்கும் கடமையான ரமளான் மாதத்தை அடைவதிலும், ஐந்தாம் கடமையான ஹஜ் மாதத்தை அடைவதிலும் இது வரை இல்லாத புது குழப்பத்தை ஒரு சாரார் ஏற்படுத்தி வருகிறார்கள்?

 

இவர்கள் பிறையை கண்களால் பார்க்கவே கூடாது என்கிறார்கள்?

 

இவர்கள் சவுதி அரேபியாவையும் பின்பற்றாமல் முந்திவிடுகிறார்கள்? ஏன் இவர்கள் சில வருட ரமளான் மாதங்களிலும் ஹஜ் மாதங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி சவுதி அரேபியா மக்கள் மாதத்தை துவக்குவதற்கு முன்பாகவே மாதத்தை துவக்குகிறார்கள்?

இவர்கள் குழப்பவாதிகள் ஆகத்தான் இருப்பார்கள்?

இவர்கள் யூதர்களை பின்பற்றுகிறார்கள்?

இவர்கள் அமெரிக்காவின் கைக்கூலிகள்?

1427 ஆண்டுகளாக பிறை விஷயத்தில் ஒரே கருத்தில் இருந்த முஸ்லீம் சமுதாயத்தை இவர்கள் தான் கூறுபோடுகிறார்கள்?

 

இப்படி பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டு இஸ்லாத்தில் எல்லாமே குழப்பம் தானோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதை நாம் ஆய்வு செய்து தெளிவு பெற வேண்டியுள்ளதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு இக்கட்டுரையை படிக்கவும்.


தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.


தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.


1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒரு சாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

3. எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

4. எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

5. ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊர் காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

6. ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு
(The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.

8. ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.

9. ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது
geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றிவருகிறார்கள்.


இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லீம்களே! இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை வைப்பதையோ, அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.

முஸ்லீம்களாகிய நாம் முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன் மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?

2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?

3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?

4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா?

5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில் எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ?
உதாரணமாக தற்போது இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப் தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களா?

6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும் கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார் கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

7. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?

8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம்
(Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் - Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar) எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல் விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம் ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (
Calendar) போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில் மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்? வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில் ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சில ஆதாரங்கள்.

OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.

நன்றி: http://www.icoproject.org/icop/ram28.html#obsnew

10. மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?

பிறையை புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்? கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில் பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர் கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.

(நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும், அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே நுழைந்து நாட்களை துவங்குங்கள். பின்பக்கத்தில் இருந்து நாட்களை துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளான்.

நாம் உலகில் வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது.

நம்மில் திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால் போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள் எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின் மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து நாட்காட்டியை வடிவமைக்க முடியும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் 10 வது அத்தியாத்தில் 5 வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விரிக்கின்றான்.

36வது அத்தியாயம் 39 வசனத்தில் . . இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.

அதை (பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி

நபி (ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும்.

பிறையின் வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில் நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம் இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில் புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில் உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான் செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ் CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

இதை உறுதிபடுத்த கீழ் கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் 17:12

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96

நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 27:86

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.

மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.

மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது நாம் ஹிஜ்ரி 1428 ம் வருட ஷஃபான் மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய கடமைப்பட்டுள்ளோம். இந்த மாதம் திங்கள்கிழமை (13.08.2007) அன்று ஆரம்பமானது. அன்று இரவு, முதல் நாளுக்குரிய தேதியை பிறை அறிவித்ததோடு, பிறை உரிய மன்ஸிலில் இருந்ததை கண்களால் பார்க்க முடிந்தது. இதை முன்கூட்டியே கணக்கின் மூலமும் அறிய முடிந்தது.

1428 ஷஃபான் மாதத்தின் 29வது நாளும் திங்கள்கிழமை தான் (10.09.2007). சந்திர மாத அடிப்படையில் 1 ஆம் தேதி என்ன கிழமை வருகிறதோ அதே கிழமைதான் 29 ஆம் நாளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். ஷஃபான் மாதத்தின் 29 ஆம் நாளுக்குரிய மன்ஸிலில் பிறை இருந்ததை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் சொன்ன ருஃயத் என்ற அடிப்படையில் அஹில்லாக்களை ஆய்வு செய்து பிறையை கணக்கிடுபவர்கள் அனைவரும் அந்த நாளுக்குரிய பிறை மன்ஸிலை பார்த்தனர்.

29 வது நாள் ஃபஜ்ர் தொழுத பிறகு பிறையை கிழக்கு பக்கம் கண்ணால் பார்த்து விட்டாலே மாதம் 30 நாள் தான் என எந்த சந்தேகமே இல்லாமல் முடிவாகிவிடும். ஏன் என்றால் சூரியனுக்கு முன்னால் சந்திரன் உதித்து விட்டதால் தான் பிறையின் மன்ஸிலை அன்று பார்க்க முடிந்தது. சந்திரனின் ஒட்டம் மூலம் மாதத்திற்கு 29 மன்ஸில்களில் 30 மன்ஸில்களோ ஏற்படும். அவை ஒவ்வொன்றும் தேதி. 1428 ஷஃபான் மாதத்தில் சந்திரனுக்கு 30 மன்ஸில்கள் இருந்தது என்பது நிரூபிக்கபட்டுள்ள உண்மையாகும். இந்த கணக்ககை நாங்கள் முன் கூட்டியே அறிவித்திருந்தும் அதை அறிந்து மாதத்தை ஆரம்பிக்காதவர்களுக்கு அல்லாஹ்வின் விசாரனை மன்றத்தில் மறுமையில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம்.

அதற்கு இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி 1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30 நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் 36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன் அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன் சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29 நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள் ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.


எனவே யாரெல்லாம் புதன் கிழமை (12.09.2007) அன்று ஹிஜ்ரி 1428 ரமளான் மாதத்தை துவக்கினார்ளோ அவர்கள் சரியான நாளில் துவக்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. புதன் கிழமை அன்று உலகின் கீழ்கண்ட பகுதிகளில் ரமளான் முதல் நாளின் மன்ஸிலை கண்ணால் பார்த்துள்ளதற்கு ஆதாரமும் உள்ளது.

South Africa: Seen: ICOP member Dr. Abdurrazak Ebrahim said: "The Ramadaan Hilaal was sighted from Rustenburg (near Johannesburg) this Wednesday evening, the end of the 29th of Shabaan 1428 AH. Cape Town had inclement weather.

USA Seen: Mr. Muhammed Billah from (NY) said: "This is to tell you that I was praying Maghrib in Jamaica Muslim Center, NY (Telephone: 718-739-3182) on that day Maghrib salat delayed for 20 minutes because some brothers with Imam went to see the Hilla, after salat two Brothers (Br. Aftab Mannan and Br. Delwar Hussain) they are regular mussullies of this Mosque claimed that they saw the Hillal on Wednesday, September 12, 2007 after sunset."

Goolam Tegally (MCW member) from Port Louis, Mauritius, reported: Seen
Hilal for Ramadhan was sighted here in Mauritius to-day Wed 12 Sep 2007 at 18:22 (U.T. +4). Sky was clear but the setting Sun was marred by clouds. The very thin crescent was first observed with 10x binoculars then with naked eye. We were 4 people to have observed the Hilal.

Thanks:

http://www.icoproject.org/icop/ram28.html#obsnew

http://www.moonsighting.com/



The Astronomical New Moon is on Thursday, October 11, 2007 at 5:00 GMT (i.e., 1:00 am EDT, or October 10, 10:00 pm PDT). It will not be visible on October 11 anywhere in the world, except Southern tip of South America and Polynesian Islands in the South Pacific. On October 12, it will be visible in New Zealand Australia, Indonesia, South Asia, Africa and Africas. In North America on October 12, it can be seen with some difficulty.

நன்றி:
http://www.moonsighting.com/


அந்த தளத்தில் விஞ்ஞான அடிப்படையில் புதிய பிறை பிறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை உலக நேரம் 5.00 மணிக்கு நடைபெறுகிறது. (பூமி சந்திரன் சூரியன் மூன்றும் நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு) அன்றைய தினமே தென் அமேரிக்கா பாலினோஸியா போன்ற இடங்களில் பிறையின் 30 வது நாளுக்கான மன்ஸிலை பார்க்க முடியும் என கூறியுள்ளது.

எனவே அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (12.10.2007) அன்று ஹிஜ்ரி 1428 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். ஆகவே அனைவரும் சரியான நாளில் வருகிற ஷவ்வால் மாதத்தை ஒன்றாக ஆரம்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பிறையிள் தேய்ந்து வளரும் மன்ஸில்களின் நிலைகளுடன் சேர்த்து தான் பார்க்க சொன்னார்கள் என்பது ஆய்வில் நாம் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. எனவே உலகில் விஞ்ஞானிகள் அனைவரிடம் கேட்டாலும் இன்றைய தினம் பிறை மன்ஸில் உண்டாகிவிட்டது என்பதை மறுக்காமல் கூறுவார்கள்.

மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ் திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும் ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இஸ்லாமிய நாட்காட்டி (Calendar) ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும், யுதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான் நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால் முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின் (Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும். ஆகவே நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்,

 

P. Mohamed Sirajudeen

C/o: Islamic Research Center.

விபரம் வேண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


தொடர்பு முகவரி:
160/101, North main road, Eruvadi - 627 103.
இமெயில்:
eruvadi@gmail.com தொலைபேசி: 04637 320777