Fri 29

ஏகத்துவம்சகோதரியின் கேள்வி: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.
அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.
லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).
இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.
மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.
திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)
மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)
'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,
பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.
ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)
யோவான், 14 அதிகாரம், வசனம் 28
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28
நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
யோவான், 5 அதிகாரம், வசனம் 30
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!
(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)
யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.
இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:
- ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
- பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
- பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
- குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.
திருக்குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)
(திரித்துவம் மற்றும் இயேசு கடவுளா? என்பது பற்றிய மிக விரிவான ஆய்வுக் கட்டுரை கூடுதல் விளக்கங்களுடன் விரைவில் ஏகத்துவம் வலைதளத்தில் வர இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்...)
வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1 English
வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2 English
நன்றி : சுவனத்தென்றல்

தினம் ஒரு குர்ஆன் வசனம்
தினம் ஒரு குர்ஆன் வசனம்
தினம் ஒரு குர்ஆன் வசனம்
தினம் ஒரு குர்ஆன் வசனம்
தினம் ஒரு குர்ஆன் வசனம்
அல்லுஃலுவு வல்மர்ஜான்1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), 'அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்'' என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), 'தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், 'இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், 'தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே'' என்று கூறினார்கள் - இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் - அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.
1542. நபி (ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா'' என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)'' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.
1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லையென்றால்..?' என்று, - நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்'' என்று பதில் கூறினார்கள்.
1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, '(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, 'நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்'' என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?' என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், 'ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, 'இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது' .இதைக் கேட்ட மக்கள், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,'நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

இஸ்லாம்கல்வி.காம் - Portal
BBCTamil.com | முகப்பு | Tamil News index
BBCTamil.com | முகப்பு | Tamil News index
தாருல் அதர் அத்தஅவிய்யா<<மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில்லான பிரச்சார அமைப்பு,
சுவனத்தென்றல்Thu 28

பிரார்த்தனை பேழைபி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும்.
உயரமான இடத்திருந்து, மாடியிருந்து கீழே இறங்கும் போது....
ஸுப்(B)ஹானல்லாஹ்
இதன் பொருள் : அல்லாஹ் தூயவன். எனக் கூற வேண்டும்.
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
இதன் பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்

அல்லுஃலுவு வல்மர்ஜான்அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திருகி) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா (அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவினையாகும்' என்று கூறி விட்டார்கள். ''(இச்சம்பவத்தை) நபி (ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்''.

BBCTamil.com | முகப்பு | Tamil News index
சத்தியமார்க்கம்.காம்
சுவனத்தென்றல்
சுவனத்தென்றல்Wed 27

ஏகத்துவம்அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். (யாத்திராகமம் 1:11)
இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்டது இரண்டாவது ராம்செஸின் காலத்திலாகும். (BC 1279-1212) ராமசெஸ் II என்ற பர்வோனின் நினைவாகவே இந்த பெயர் வழங்கப்பட்டதாம் (Dr. D Babupaul : வேத சப்த ரத்னாகரம், பக்கம் 584) யோசேப்பைக் குறித்து எதுவும் அறியாத ஒரு புதிய மன்னராகவே ராம்சேஸைப் பற்றி பைபிள் குறிப்பிடுகின்றது.
''யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.'' (யாத்திராகமம் : 1:8)
மேற்கண்ட பைபிளின் வரிகளின் அடிப்படையில் நாம் பின்வரும் முடிவுக்கு வரலாம்.
1. யோசேப்புக்குப் பின் பலகாலம் கடந்தே ராம்சேஸ் அதிகாரமேற்றான்
2.இந்த ராம்சேஸின் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராம்சேஸ் என்ற நகரம்.
3.யோசேப்புடைய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நகரம் இல்லை.
ஆனால் ஆதியாகமத்தில் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது முற்றிலும் முரண்படுகின்றது. பர்வோனின் கட்டளைப்படி யாக்கோபுக்கும் அவரது புத்திரர்களுக்கும் வழங்கப்பட்ட நகரமே ராம்சேஸ் என்று ஆதியாகமம் கூறுகின்றது.
பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். (ஆதியாகமம் 47:11)
யோசேப்புடைய காலத்தில் ராம்சேஸ் என்ற நகரமே இல்லை என்றிருக்க பிறகு எவ்வாறு யோசேப் அதனை தனது தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் வழங்க முடியும்?
இவ்வாறாக பைபிளில் ஏராளமான அபத்தங்களை நாம் காண முடிகின்றது. இத்தகை அபத்தங்களை நியாயப்படுத்தவும் முடியாமல் விளக்கவும் முயாமல் பைபிள் பண்டிதர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அல்லுஃலுவு வல்மர்ஜான்
சுவனத்தென்றல்
சுவனத்தென்றல்
சத்தியமார்க்கம்.காம்Tue 26

தாருல் அதர் அத்தஅவிய்யா<<மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில்லான பிரச்சார அமைப்பு,
