Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

ஜிமெயில் (Gmail)

முஃப்தி

 

சிறப்பம்சங்கள்:

 

bullet

புது கணக்கை தொடங்க, அதிக கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்தாது.

bullet

நமக்கு வரும் மின்னஞ்சல்களை நமது அலுவலக மின்னஞ்சல்களுக்கோ அல்லது நாம் அடிக்கடி பார்வையிடும் மற்ற மின்னஞ்சல்களுக்கு Forward செய்யும் வசதி.

bullet

மின்னஞ்சல்களுக்குள்ளேயே தேடும் வசதி. யுனிகோடு தமிழிலும் சிறப்பாக எழுதலாம், தேடலாம்.

bullet

இணைப்பு கோப்புகள் அனுப்பும்போது ஒவ்வொரு இணைப்பு கோப்புகளும் இணைப்பாகும்வரை காத்திருக்க அவசியமில்லை.

bullet

பெரிய அளவு கோப்புகளை ஒட்டி அனுப்பலாம்.

bullet

அளவு பெரியது என்பதால் வந்திருக்கும் மின்னஞ்சல்களில் எதை அழிப்பது என்பதில் குழப்பமடையத் தேவையில்லை.

bullet

POP Access வசதியும் உண்டு. இதன்மூலம் அவுட்லுக்கில் இருந்துக்கொண்டே பயனடையலாம்.

bullet

அருமையான கூளதடுப்பான் (Spam) அமைப்பு.

bullet

புதிய மின்னஞ்சல்களை அவ்வப்போது தெரிவிக்கும் Notifier.

bullet

படவிளம்பரங்கள் இல்லை. (எழுத்து விளம்பரங்கள் தவிர்த்து)

bullet

அழகான முகப்புப் பக்கம் மட்டுமல்லாது உரையாடல் அமைப்பு முறையில் செய்திகளை நமக்கு காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

bullet

இணைப்பில் (Attachments) வந்த மீயுரை (html) தமிழ் யுனிகோடு பக்கங்களை காட்டுவதில் சற்று பிரச்சினை செய்கிறது. மற்றபடி தமிழ் யுனிகோடு செய்திகளை (இணைப்பு செய்யாமல்) விபரம் மற்றும் பொருள் (Subject) பகுதியில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

bullet

exe கோப்புகளை அனுப்புவதையோ அல்லது பெற்றுக்கொள்வதையோ தடுத்து வைரஸிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வைரஸ் மின்னஞ்சல்கள் மட்டுமே வருகின்றன என்று குறைப்பட்டுக் கொள்பவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

bullet

உங்களின் முகவரி புத்தகத்தில், வெளியேறும் மின்னஞ்சல்களின் முகவரிகளை தானே பதித்துவிடுகிறது.

bullet

இன்னும் பல...  Visit www.gmail.com