Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

சவுதி அரேபியாவில் DSL இணைப்பு

முஃப்தி

 

DSL மற்றும் அதன் பயன்கள்:
துரிதமான இணைய மேய்ச்சல்
(Browsing) மற்றும் அதிவேக (Fast Download) பதிவிறக்கத்திற்கு  DSL (Digital Subscriber Line) அல்லது Broadband இணைப்பு பயன்படுத்தப்படுகின்றது. இச்சேவை சவுதியில் அதிகப்படியான இடங்களுக்கு கிடைக்கும் வகையில் "சவுதி தொலைபேசி" துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இணைய சேவையை கணக்கின்றி, தடங்களின்றி பயன்படுத்த முடியும். இணைய இணைப்பில் இருக்கும்போதே அதனை துண்டிக்காமல் தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.


உங்களுக்குத் தேவையா
DSL?
சவுதியில், சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணிநேரம் டயலப் இணைய சேவையை பயன்படுத்துகின்றவர்கள், DSL-க்கு மாறுவதுதான் சிறந்தது. அதாவது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொலைபேசி கட்டணத்தில் இணைய இணைப்பிற்காக மட்டும் 300 சவுதி ரியால் செலுத்துகின்றவராக இருப்பீர்களானால், "உங்களுக்குத் தேவை DSL"


எப்படி பெறுவது?
சவுதி டெலிகாம் சேவை
907 என்ற எண்ணை அழைத்து அத்தொலைபேசி இணைப்பில் DSL வசதியை பெற முடியுமா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். பயனர்கள், எக்சேஞ்சியிலிருந்து 5 கி.மீட்டர் வட்டத்திற்குள் இருந்தால் மட்டுமே DSL வசதி கிடைக்கும். சவுதி டெலிகாம் தற்போது 128K-யிலிருந்து ஆரம்பித்து 256K, 512K, 1MB வேக வசதிகளை வழங்குகிறது.


தேவையான கருவிகள்:
USB port வசதியுடன் கூடிய கணினி, DSL மோடம், Splitter மற்றும் PPPoE (Point-to Point-Protocol over Ethernet) software இவற்றுடன் DSL வேகம் குறையாமல் இருக்க நேர்த்தியான உள்கட்ட தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும். மோசமான தொலைபேசி சேவை கூட DSL வேகத்தை குறைத்துவிடலாம். மோடம் வாங்கும்போது சோதித்து பார்த்து வாங்குவது நல்லது. சவுதி தொலைபேசி சேவை நிறுவனத்திலிருந்து உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வாசலில் உள்ள தொலைபேசி இணைப்பு பெட்டி (Junction box) வரை வந்து சோதித்து பார்க்கும் போது, அருகில் இருந்து DSL இணைப்பு இயங்குகின்றதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

 

எவ்வளவு செலவாகும்?
சவுதியில்
DSL வசதியை அனுபவிக்க கீழ்கண்ட கட்டணங்களை செலுத்த வேண்டும்.

 

சவுதி தொலைபேசி சேவையின் DSL விலைப் பட்டியல்


DSL சேவையை பயன்படுத்த இந்த வசதியுடன் "இணைய சேவை வழங்கி" எனும் ISP (Internet Service Provider) இணைப்பும் இருக்க வேண்டும். இவ்வசதி 64K வேகத்திலிருந்து கிடைக்கின்றது. கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி சில இணைய சேவை வழங்கிகளின் கட்டணங்களை பார்க்கவும்.

http://www.awalnet.net.sa/English/Files/awal_dsl_price_list.asp

http://www.cyberia.net.sa/consumer/broadband_dsl/prices.asp

http://www.sbm.net.sa/index.php/sbm/e/17

http://www.nesma.net.sa/TxtDataDetails.aspx?DataCode=19&Servid=46

 

இவை தவிர இன்னும் பல இணைய சேவை வழங்கிகள் இருக்கின்றன. அவற்றின் பட்டியலை www.saudia-online.com/ISP.htm என்ற முகவரியில் பார்க்கலாம்.


இன்றைய நிலவரப்படி சவுதியில் மிகக் குறைவான
DSL வேகத்தை அனுபவிக்க, மாதத்திற்கு கீழ்கண்ட செலவு ஆகும்.


சவுதி தொலைபேசி சேவைக்கு
90 ரியால் (128 K Speed)
இணைய சேவை வழங்கிக்கு
69 ரியால்

எனவே,
மொத்தம் :
159 ரியால் (ஒரு மாதத்திற்கு)
மொத்தம் :
318 ரியால் (இரண்டு மாதத்திற்கு)

 

இக்கட்டணம் DSL சேவைக்கு மட்டும்தான். தொலைபேசி இணைப்பிற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் தனிக்கட்டணம் எப்பொழுதும்போல் உண்டு.

 

-முஃப்தி

 11 ஏப்ரல் 2007 - Jeddah

 

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விபரங்கள் தவிர்த்து இன்னும் பல விபரங்கள் உங்களுக்கு தேவைப்படலாம். எனவே, இத்துறையில் அனுபவங்களை பெற்றவர்களைக் கேட்டு உங்களுக்குத் தேவையான DSL வேகம் மற்றும் ISP வழங்கிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

முதலாவதாக வரும் தொலைபேசி கட்டண விபரத்தில், நடந்து முடிந்த மாதத்தின் DSL சேவை தொகையுடன் இனி வரும் 2 மாதத்திற்கான தொகையும் முன்தொகையாக
(Advance payment) இடம்பெற்றிருக்கும். இத்துடன் 300 சவுதி ரியால் one time Installation fee வசூலிக்கப்படும்.

குறிப்பு:
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜுன் 30-ந் தேதி
(2007) வரையிலான மூன்று மாதத்திற்கு, Installation fee (SR 300) இல்லாமல் DSL இணைப்பு தருவதாக சவுதி தொலைபேசி துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு அதன் இணையத்தளத்தை (www.stc.com.sa) பார்வையிடவும்.