உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான்
இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட்
ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது
குறிப்பிடத்தக்கது.
எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு
வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை
அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான்
இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை
கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே
தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை
உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால்
இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ்
XP இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் 98-ல்
இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு)
இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ்
யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க
வேண்டும்.
வாசகர்கள் யுனிகோடின் அவசியத்தை
அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தளங்களில் விரிவாக
படிக்கலாம்.
http://kasi.thamizmanam.com/index.php?itemid=77
http://www.ezilnila.com/
மொழி அனுசரனையை சேர்ப்பது
எப்படி?
யூனிகோட் மூலம் தமிழ் எழுதும் முன் முதலில் மொழி அனுசரனையை அதாவது
Language Supportஐ உங்கள் கணினியில் சேர்க்க வேண்டும் இதற்கு
கீழ்காணும் முறையை பின்பற்றவும்
குறிப்பு மொழி அனுசரனையைச் சேர்க்கும் போது இயங்குதள குறுந்தட்டு
அதாவது Operating System CD தேவைப்படும்
வின்டோஸ் 2000
Startஐ சொடுக்கி அதில் Settings என்ற பகுதியிலிருந்து Control Panelஐ
தேர்வு செய்யவும்
இப்போது Regional Options என்பதை
சொடுக்கவும் இதில் General என்ற பகுதிக்குச் சென்று அதில் Indic என்ற
check boxஐ சொடுக்கிக் கொள்ளவும்.
பிறகு OK பொத்தானை அழுத்த இயங்குதள
CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இப்போது தேவையானவற்றை பூர்த்தி
செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை சேர்க்கப்பட்டுவிடும்
வின்டோஸ் XP
Startஐ சொடுக்கி அதில் Control Panelஐ தேர்வு செய்யவும்
இப்போது Regional and Language
Options என்பதை சொடுக்கவும்
இதில் Languages என்ற பகுதிக்குச்
சென்று அதில் காணும் supplimental Language Support என்ற பகுதியில்
உள்ள Install files for complex scripts and right to left language
including Thai என்ற check boxஐ சொடுக்கிக் கொள்ளவும் பிறகு OK
பொத்தானை அழுத்த இயங்குதள CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இபோது
தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை
சேர்க்கப்பட்டுவிடும்
இன்டர்நெட் எக்ஸ்புலோரர்
இன்டர்நெட் எக்ஸ்புலொரரின் Toolsஐ சொடுக்கி Internet Options என்பதை
தேர்வு செய்யவும் இப்பொது Fonts என்ற பொத்தானை சொடுக்கி Language
Script என்ற பகுதியில் தமிழை தேர்வு செய்யவும் பிறகு web page Font
என்ற பகுதியில் Latha என்ற எழுத்துருவைத் தேர்வு செய்து OK பொத்தான்களை
சொடுக்கவும்.
யாகூமெயில்
யாகூமெயில் இணையத்தில் யூனிகோட்
மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய Compose என்ற பகுதிக்குச் செல்லவும்.
இப்பொது Color and Graphics என்பதை தேர்வு செய்ய யாகூவின்
compose பகுதியில் Rich Text Editor தோன்றும்.
அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.
ஹாட்மெயில்
ஹாட்மெயில் இணையத்தில் யூனிகோட் மூலம் தமிழில் மின்னஞ்சல்
செய்ய New Messageஐ தேர்வு செய்யவும்.
இப்பொது Tools என்ற பகுதிக்குச் சென்று RIch Text Editor ON என்பதை
தேர்வு செய்ய ஹாட்மெயிலின் compose பகுதியில் Rich Text Editor
தோன்றும். அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.
அவுட்லுக்
97/98/2000 மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
அவுட்லுக்கில் யூனிகோட் மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய New Message-ஐ
தேர்வு செய்யவும்
இப்பொது Format என்ற பகுதிக்குச் சென்று HTML என்பதை தேர்வு செய்யவும்
அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.
(நன்றி: குறல்
தமிழ் செயலி version 3.0)
http://kstarsoft.com/
|