ஆரம்ப காலங்களில் ஒரு பயான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு குர்ஆன் மத்ரஸாவை வைப்பதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியில் பெரும் பாலானோரை எப்படி கலந்துகொள்ளச் செய்து பயன்பெற செய்வது? என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என்று திட்டமிட்டோம்.
அங்கே வருகின்றவர்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும், மின் விசிறியின் கீழ் அவர்களை தரமான நாற்காளிகளில் உட்காரவைக்க வேண்டும், இடையிடையே குளிர்பாணம் வழங்க வேண்டும், மலசல கூடங்கள் டைல்ஸ் புடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற திட்டமிடல்களுக்கு அன்று இடமிருக்கவில்லை.
காரணம் அன்று அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு தியாக உணர்வு நம்மிடம் இருந்தது.
ஆனால் இன்று ஒரு தஃவா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் என்று மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கூறப்பட்டால் அதெப்படி இப்போது நீங்கள் சொன்ன காலத்துக்குள் முடியும்? சரியான திட்டமிடல் வேண்டாமா? குறைந்தது இத்தனை மாதங்கள் சரி தேவைப்படுமே என்று நான் மேலே கூறிய ஆடம்பரங்களை திட்டமிடலாக பட்டியல் படுத்துவார்கள்.
இருப்பதை கொண்டு முடிந்த வரை மக்கள் பயனடையும் முறையில் அழைப்புப் பணியை செய்ய திட்டமிடாமல் ஆடம்பர வசதிகளை திட்டமிடலாக எடுத்துக்கொண்டு அழைப்பு பணியை பிற்போடும் இந்த போக்கு முற்றாக சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
அன்று இன்ன இடத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் ஒரு பயான் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டால் பல மயில் தூரத்தில் இருந்தாலும் ஒழிந்து ஒழிந்து ஊருக்கு தெரியாமல் சொந்த மனைவிக்கு தெரியாமல் மார்க்கத்தை படிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கஷ்டங்களை எல்லாம் இனிமையாக கருதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்கள் இன்றைய தஃவா கள ஆடம்பர திட்டமிடல் காரணமாக காணாமல் போய்விட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.
எந்த அளவுக்கென்றால் இன்றைய ஆடம்பர திட்டமிடல்கள் தலைக்கு மேல் மின்விசிறி இல்லை என்றால் ஐங்கால தொழுகைக்கு கூட மஸ்ஜிதுக்கு வராத சமூகத்தையே உருவாக்கி உள்ளது.
குறிப்பு: வசதிகளை ஏற்படுத்திகொள்வது கூடாது என்று நான் கூற வர வில்லை மாறாக நான் கட்டுரையில் கூறிய காரணங்களை போல் இன்னும் உள்ளவற்றை திட்டமிடலாக கூறி அழைப்பு பணியை பிற்போடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கின்றேன்.