Featured Posts

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்குப் பயந்த மார்க்க அறிஞர்கள் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் கண்டித்து வருகிறார்கள். …

Read More »

அல்லாஹ்வின் அற்புதப் படைப்பினங்கள்

அல்லாஹ்வின் அற்புதப் படைப்பினங்கள் CDs are available at : OB creations, 41, Reservoir road, Dematagoda road, Colombo 09, Sri Lanka Tel. Althaf farook (+94 777898027), Rashid Nuhman (+94 714121980) Email: obcreations@gmail.com Download Video

Read More »

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

172- நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள். புகாரி-2029: ஆயிஷா(ரலி)

Read More »

கடமையான குளிப்பு!

171- நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம். புகாரி-322: உம்முஸலமா (ரலி)

Read More »

மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.

170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள் நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் …

Read More »

சுப்ஹானல்லாஹ்!

169- நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். புகாரி-303: மைமூனா (ரலி)

Read More »

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்தூதர்கள்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ”ஒரே இறைவனை வணங்குங்கள்” என்ற ஏகத்துப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை. மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் …

Read More »

மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…

168- (நபி (ஸல்) அவர்களது மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப் படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? புகாரி-302: ஆயிஷா (ரலி)

Read More »

அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதம்

ஹாரூன்யஹ்யா அவர்களின் தயாரிப்பு.  தமிழில் OB Creations, Sri Lanka CDs are available at : OB creations, 41, Reservoir road, Dematagoda road, Colombo 09, Sri Lanka Tel. Althaf farook (+94 777898027), Rashid Nuhman (+94 714121980) Email: obcreations@gmail.com Download Video 216 MB

Read More »

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167- நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் …

Read More »