வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதருமாவார்கள் என்றும் சாட்சி கூற
வேண்டும். பிறகு இச்சாட்சியத்திற்;கிணங்க வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள வேண்டும்.
(
مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ
لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَأَنَّ عِيسَى
عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى
مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ
أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ )
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை,
நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் அவனது
தூதருமாவார்கள், நிச்சயமாக ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும்
அவனது தூதருமாவார்கள், மேலும் அவர்கள் மரியமிடம் அல்லாஹ் போட்ட
வார்த்தையும் அவனிடமிருந்து கொடுக்கப்பட்ட ரூஹும் ஆவார்கள்,
சொர்க்கம் இருப்பது உண்மையாகும், நரகம் இருப்பதும்; உண்மையாகும் என
சாட்சி கூறுபவரை அவர் செய்த நல்லறங்களுடன் அல்லாஹ் சொர்க்கத்தில்
நுழையச் செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் -ரலி, நூற்கள் : புகாரீ 3140,
முஸ்லிம்)
( مَا مِنْ عَبْدٍ
قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا
دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ
زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ
وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ
قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ
)
அபூதர் (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள் :
ஓர் அடியார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி அக்கொள்கையுடனே மரணித்து
விட்டால் நிச்சயமாக அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அவர் திருடினாலும் விபச்சாரம்
செய்தாலுமா?! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவன் திருடினாலும்
விபச்சாரம் செய்தாலும்தான்! என்று பதிலளித்தார்கள். -மீண்டும்- நான்
அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா?! என்று கேட்டேன். அதற்கு
அவர்கள், அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று
பதிலளித்தார்கள். நான் மூன்றாவது அல்லது நான்காவது தடவை இவ்வாறு
கேட்டபோது அபூதரின் மூக்கு -மண்ணில் ஒட்டட்டும்! அவன் திருடினாலும்
விபச்சாரம் செய்தாலும்தான்! என்று கூறினார்கள். (நூற்கள் : புகாரீ
5379, முஸ்லிம்)
( . . اذْهَبْ
بِنَعْلَيَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا
الْحَائِطِ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا
بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ )
< < < அபூஹுரைராவே! (நான்
இங்குதான் இருக்கின்றேன் என்பதற்கு ஆதாரமாக) என்னுடைய இரு
காலணிகளையும் எடுத்துச் செல்லுங்கள்! வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மனமார ஏற்று உறுதியாகச் சாட்சி
கூறுபவருக்கு சொர்க்கம் உள்ளது என்ற சுபச்செய்தியை இந்த
தோட்டத்திற்கு வெளியே நீங்கள் சந்திப்பவர்களுக்கு
அறிவித்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியனுப்பினார்கள்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல் :
முஸ்லிம் 46)
|