( مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ
الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ
مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ
أَجِرْهُ مِنَ النَّارِ )
சொர்க்கத்தைத் தரவேண்டுமென
மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்!
அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம்
கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை
யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! நரகை
விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2495, நஸாயீ,
இப்னுமாஜா, ஹாகிம்)
|