( لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ فِي
شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ كَانَتْ تُؤْذِي
النَّاسَ)
பாதையின் நடுவே மக்களுக்கு
துன்பம் தந்து கொண்டிருந்த மரத்தை வெட்டியதன் காரணமாக ஒருவர்
சொர்க்கத்தில் சுற்றித் திரிவதை நான் கண்டேன் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா
-ரலி நூல் : முஸ்லிம் 4745)
( نَزَعَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ غُصْنَ شَوْكٍ عَنِ
الطَّرِيقِ إِمَّا كَانَ فِي شَجَرَةٍ فَقَطَعَهُ وَأَلْقَاهُ
وَإِمَّا كَانَ مَوْضُوعًا فَأَمَاطَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ
بِهَا فَأَدْخَلَهُ الْجَنَّةَ )
ஒருவர் பாதையை விட்டும் ஒரு
முள் மரக் கிளையை வெட்டி எறிந்தார் அல்லது பாதையில் போடப்பட்டிந்த
அந்தக் கிளையை அகற்றினார். இதனைத் தவிர வேறு எந்த நல்லறத்தையும்
அவர் செய்துவிடவில்லை. எனினும் இச்செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு
அவரை சுவர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 4565)
|