(مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَوْمَ
الْقِيَامَةِ أَنَا وَهُوَ وَضَمَّ أَصَابِعَهُ)
இரண்டு பெண் குழந்தைகளை
பருவமடையும் வரை -முறையாக- வளர்த்தவரும் நானும் மறுமை நாளில்
இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் விரல்களை இணைத்துக்
காண்பித்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : முஸ்லிம் 4765)
( مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ أَنَا وَهُوَ الْجَنَّةَ
كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبُعَيْهِ )
இரண்டு பெண் குழந்தைகளை முறையாக
வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்)
அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ 1837)
( عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ جَاءَتْنِي مِسْكِينَةٌ
تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا فَأَطْعَمْتُهَا ثَلَاثَ تَمَرَاتٍ
فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً وَرَفَعَتْ إِلَى
فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا ابْنَتَاهَا
فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا
بَيْنَهُمَا فَأَعْجَبَنِي شَأْنُهَا فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ
لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ
اللَّهَ قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الْجَنَّةَ أَوْ أَعْتَقَهَا
بِهَا مِنَ النَّارِ )
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள் :
இரு சிறுமிகளை சுமந்தவளாக என்னிடம் ஒரு ஏழைப் பெண் வந்தார். நான்
அவருக்கு மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். இருவருக்கும்
ஒவ்வொரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை தான்
உண்பதற்காக வாய் வரை உயர்த்தி விட்டார். அப்போது அவருடைய இரு
பிள்ளைகளும் அதனையும் கேட்டனர். தான் உண்ண நினைத்த அப்பழத்தை
இரண்டாகப் பிளந்து அவ்விருவருக்கும் கொடுத்தார். அவருடைய
இச்செயலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட நான், இச்சம்பவத்தை நபி
(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அவளின் இச்செயலின்
காரணமாக நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக்
கடமையாக்கிவிட்டான். அல்லது அவளை நரகத்திலிருந்து உரிமை
விட்டுவிட்டான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4764)
( أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ
وَسَلَّمَ قَالَتْ جَاءَتْنِي امْرَأَةٌ وَمَعَهَا ابْنَتَانِ
لَهَا فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ
تَمْرَةٍ وَاحِدَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَأَخَذَتْهَا
فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا
شَيْئًا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا فَدَخَلَ عَلَيَّ
النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ
حَدِيثَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ
مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ
كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ )
புகாரீ, முஸ்லிம் இரண்டிலும்
இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள் :
ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளுடன் என்னிடம் வந்து யாசகம் கேட்டார்.
அப்போது ஒரு பேரித்தம் பழத்தைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை.
எனவே என்னிடம் இருந்த அதனை அவரிடம் கொடுத்தேன். அவர் அதனை
இரண்டாகப் பிளந்து தன் இரு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு, அதில்
எதனையும் அவர் உண்ணாமல் தம் பிள்ளைகளுடன் வெளியேறிச் சென்றார்.
இச்சம்பவத்தை என்னிடம் வந்த நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.
அப்போது அவர்கள், பெண் பிள்ளைகளின் காரணமாக ஏதேனும் சோதனைக்கு
ஆளாக்கப்பட்ட ஒருவர் -அக்கஷ்டங்களுடன்- அவர்களுக்கு கருணை
காட்டினால் அவரை நரகத்தை விட்டும் தடுக்கும் திரையாக அப்பிள்ளைகள்
ஆகிவிடுவார்கள் என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4763)
(من كن ثلاث بنات أو ثلاث أخوات فاتقى الله وأقام عليهن كان معي في
الجنة هكذا وأومأ بالسباحة والوسطى)
எவருக்கேனும் மூன்று பெண்
பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லாஹ்வுக்குப் பயந்து
அவர்களை முறையாகப் பேணிவளர்த்தால் அவர் சொர்க்கத்தில் என்னுடன்
இவ்வாறு இருப்பார் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் நடு விரலையும்
ஆட்காட்டி விரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள். (அறிவிப்பவர் :
அனஸ் -ரலி, நூல் : அபூ யஃலா)
( مَنْ كُنَّ لَهُ ثَلَاثُ بَنَاتٍ يُؤْوِيهِنَّ وَيَرْحَمُهُنَّ
وَيَكْفُلُهُنَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ الْبَتَّةَ قَالَ قِيلَ
يَا رَسُولَ اللَّهِ فَإِنْ كَانَتِ اثْنَتَيْنِ قَالَ وَإِنْ
كَانَتِ اثْنَتَيْنِ قَالَ فَرَأَى بَعْضُ الْقَوْمِ أَنْ لَوْ
قَالُوا لَهُ وَاحِدَةً لَقَالَ وَاحِدَةً )
ஒருவருக்கு மூன்று பெண்
குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன்
வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு
பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள்,
இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள்.
அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை
இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என
அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : அஹ்மத் 13729)
( مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ ثَلَاثَ بَنَاتٍ أَوْ أُخْتَيْنِ
أَوْ ثَلَاثَ أَخَوَاتٍ حَتَّى يَمُتْنَ أَوْ يَمُوتَ عَنْهُنَّ
كُنْتُ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبُعَيْهِ
السَّبَّابَةِ وَالْوُسْطَى )
யாரேனும் இரண்டு அல்லது மூன்று
பெண் பிள்ளைகளையோ, இரண்டு அல்லது மூன்று சகோதரிகளையோ அவர்கள்
மரணிக்கும் வரை அல்லது அவர்களை விட்டும் இவர் மரணிக்கும் வரை
பொறுப்பேற்றுக் கொண்டால் நானும் அவரும் சொர்க்கத்தில் இவ்வாறு
இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தம் நடு விரலையும் ஆட்காட்டி
விரலையும் -உயர்த்தி- சைகை செய்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் : அவர்கள் பருவம் அடையும் வரை என்று
வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12041, இப்னு
ஹிப்பான்)
|