(مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ نَبِيُّ
اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ وَجَبَتْ
وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ
نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ
وَجَبَتْ وَجَبَتْ قَالَ عُمَرُ فِدًى لَكَ أَبِي وَأُمِّي مُرَّ
بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ فَقُلْتَ وَجَبَتْ
وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ
فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ
خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ
شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي
الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ
شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ )
ஒரு ஜனாஸா கொண்டு
செல்லப்பட்டது. அதனைப் பற்றி நற்சான்று கூறப்பட்டது. உடனே நபி
(ஸல்) அவர்கள், கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது!
கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு
செல்லப்பட்டது. அதனைப் பற்றி தவறான கருத்துக் கூறப்பட்டது. அப்போது
நபி (ஸல்) அவர்கள் கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது!
கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். அப்போது, -அல்லாஹ்வின்
தூதரே!- எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ஒரு
ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பற்றி நற்சான்று கூறப்பட்டது.
உடனே கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று
கூறினீர்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப்
பற்றி தவறான கருத்துக் கூறப்பட்டது. அப்போதும் கடமையாகிவிட்டது!
கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று கூறினீர்கள்! என அதற்கு
உமர் (ரலி) அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், நீங்கள் நற்சான்று வழங்கியவருக்கு சொர்க்கம்
கடமையாகிவிட்டது. நீங்கள் கெட்ட அபிப்பிராயம் கூறியவருக்கு நரகம்
கடமையாகிவிட்டது. பூமியில் நீங்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்!
பூமியில் நீங்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்! பூமியில் நீங்கள்
அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்! என்றார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1578)
(. . . قَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ
أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ
اللَّهُ الْجَنَّةَ فَقُلْنَا وَثَلَاثَةٌ قَالَ وَثَلَاثَةٌ
فَقُلْنَا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ
الْوَاحِدِ )
யாரேனும் ஒரு முஸ்லிமுக்கு நால்வர் நற்சான்று கூறினால் அல்லாஹ்
அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுகிறான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அப்போது, மூவர் கூறினால்? என்று கேட்டோம்,
அதற்கவர்கள், மூவர் கூறினாலும்தான்! என்றார்கள். இருவர் கூறினால்?
என்று கேட்டோம். அதற்கவர்கள், இருவர் கூறினாலும்தான்! என்றார்கள்.
அதன் பிறகு நாங்கள் ஒருவர் சாட்சி கூறுவதைப் பற்றி கேட்கவில்லை.
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல் : புகாரீ 1279)
( أَهْلُ الْجَنَّةِ مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ
النَّاسِ خَيْرًا وَهُوَ يَسْمَعُ وَأَهْلُ النَّارِ مَنْ مَلَأَ
أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا وَهُوَ يَسْمَعُ )
தன்னைப் பற்றி மக்கள் நற்சான்று கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ்
அதிகமாக கேட்கச் செய்து விட்டானோ அவர் சொர்க்கவாதியாவார். தன்னைப்
பற்றி மக்கள் தவறாகக் கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ் அதிகமாக
கேட்கச் செய்து விட்டானோ அவர் நரகவாதியாவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : இப்னுமாஜா
4214)
|