யாசகம் கேட்கக் கூடாது
( مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا
وَأَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ فَقَالَ ثَوْبَانُ أَنَا فَكَانَ
لَا يَسْأَلُ أَحَدًا شَيْئًا )
மக்களிடம் எதனையும் -யாசகம்- கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம்
தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை
நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே
ஸவ்பான் (ரலி) அவர்கள், நான்! என்று கூறினார்கள். அவர்கள்
எவரிடமும் எந்த உதவியும் கேட்காதவராக இருந்தார்கள்.
(அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூற்கள் : அபூதாவூத் 1400, அஹ்மத்,
நஸாயீ)
فَكَانَ ثَوْبَانُ
يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ فَلَا يَقُولُ لِأَحَدٍ
نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَأْخُذَهُ
ஸவ்பான் (ரலி) அவர்கள் வாகனத்தில் இருக்கும் போது அவருடைய சாட்டை
கீழே விழுந்து விட்டால் இதனை எடுத்துத் தாருங்கள்! என்று கூட
எவரிடத்திலும் கேட்க மாட்டார்கள். அவர்களே இறங்கி அதனை எடுத்துக்
கொள்வார்கள். (அஹ்மத், இப்னுமாஜா : 1827)
|
அல்லாஹ்வை இரட்சகனாகவும்,
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்
தூதராகவும்... |