மறுமை நாளில் நாட்களை அல்லாஹ் அதற்குரிய தோற்றத்தில் எழுப்புவான்.
அதில் வெள்ளிக் கிழமையை ஒளிவீசும் பூக்களாக எழுப்புவான். மணமகனிடம்
செல்லும் மணமகள் -அலங்கரிக்கப்படுவது- போன்று வெள்ளிக் கிழமையை
-முறையாக- பேணியவர்கள் அப்பூக்களால் அலங்கரிக்கப்படுவார்கள்.
அவைகள் ஓளி வீசிக் கொண்டிருக்கும். அவ்வொளியில் அவர்கள் நடந்து
செல்வார்கள். அவர்களின் நிறம் பணிக் கட்டி போன்று வெண்மையாக
இருக்கும். அவர்களின் மணம் கஸ்தூரி போன்று கமழ்ந்து
கொண்டிருக்கும். அவர்கள் கற்பூர மலையில் மூழ்குவார்கள். அவர்களை
மனித இனத்தவரும் ஜின் இனத்தவரும் ஆச்சரியத்தால் கண்ணிமை
சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, இந்நிலையில் அவர்கள் அனைவரும்
சொர்க்கத்தில் நுழைந்து விடுவார்கள். அல்லாஹ்விடம் நற்கூலியை
எதிர்பார்த்து பாங்கு சொன்னவர்களைத் தவிர மற்ற எவரும் அவர்களுடன்
இணைந்து கொள்ளமுடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ -ரலி, நூல் : இப்னு ஹுஸைமா)
12 வருடங்கள் பாங்கு சொன்னவருக்குச்
சொர்க்கம்.
( مَنْ أَذَّنَ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ
الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ
حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلَاثُونَ حَسَنَةً )
பன்னிரெண்டு வருடங்கள் பாங்கு சொன்னவருக்கு சொர்க்கம்
கடமையாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் அவர் கூறும் பாங்கிற்காக 60
நன்மைகளும் இகாமத்திற்காக 30 நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகின்றன
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 720, ஹாகிம்)
|