சொர்க்கவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (உடலாலும்
பொருளாலும்) பலவீனமானவர், அதனால் சமுதாயத்தில்
புறக்கணிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் சொர்க்கவாதிகளே! அவர்கள்
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக்
கொள்வான். நரகவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கடின மனம்
கொண்ட, பருமனான உடலுடன் ஆணவத்துடன் நடக்கும், பெருமை பிடித்த
ஒவ்வொருவனும் நரகவாதியே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹப் -ரலி, நூற்கள் : புகாரீ4537,
முஸ்லிம்)
( احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي الْجَبَّارُونَ
وَالْمُتَكَبِّرُونَ وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ
فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ
أَشَاءُ وَرُبَّمَا قَالَ أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ وَقَالَ لِهَذِهِ أَنْتِ
رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا )
சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. ஆணவக்காரர்களும்
பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள்
என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில்
நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. அப்போது, நீ என்னுடைய
தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்!
நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை
செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு
விடுவீர்கள்! என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ்
கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 5081)