நீதமான அரசன்,
இரக்கமுள்ள மனிதன், பிறரிடம் கையேந்தாதவர்
ஆகிய மூவரின் சிறப்பு
( . . . وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ
مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ
وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ)
மூன்று நபர்கள் சொர்க்கவாசிகள் : நீதமாக நடந்து, தர்மங்கள் செய்து,
மக்களால் போற்றப்படும் அரசன். அனைத்து உறவினர்கள் மற்றும்
முஸ்லிம்கள் அனைவரின் விஷயத்திலும் இரக்க குணமும் கருணை உள்ளமும்
கொண்ட மனிதன். குடும்பச் சுமையிருந்தும் கூட ஹராமை விட்டும்,
பிறரிடம் யாசிப்பதை விட்டும் தன்னைக் காத்துக் கொண்டு, அவ்வாறே
நடந்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டும் மனிதன் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இயாழ் இப்னு ஹிமார் -ரலி, நூல் : முஸ்லிம் 5109)
|
தன்னிடம் பிறர் நல்ல
முறையில் நடந்து கொள்ள விரும்புவது போன்று நாம் பிறரிடம் நடந்து
கொள்ள வேண்டும் |