31-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ
وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ
أَللَّهُمَّ اغْفِرْ لِيْ هَزْلِيْ وَجِدِّيْ وَخَطَئِيْ
وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ
யாஅல்லாஹ்! என்னுடைய
குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய
செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக!
இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான்
விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும்
மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து -பாவங்களையும்- மன்னித்
தருள்வாயாக!
32-أَللَّهُمَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ،
وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ
யாஅல்லாஹ்! என்னை மன்னித்து
விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக!
உணவளிப்பாயாக!
33-أَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا،وَلاَ
يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفـِرْ لِيْ مَغْفِرَةً
مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ
الرَّحِيْمُ
யாஅல்லாஹ்! எனக்கு நானே மிக
அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவராலும்
எனது பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் பேரருளால் என்னை
மன்னித்து, கிருபையும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும்
கிருபை செய்பவனுமாவாய்.
34-أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ
تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَللَّهُمَّ
إِنِّيْ أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ
تُضِلَّنِيْ، أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ، وَالْجِنُّ
وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ
யாஅல்லாஹ்! நான் உனக்கே
கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி
கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன்னிடமே முறையிடுகிறேன்.
யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை.
உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் நிச்சயமாக நான் உன்னிடம்
கேட்கிறேன், என்னை நீ வழிதவறச் செய்யாதிருப்பாயாக! நீயே மரணிக்காத
நித்திய ஜீவன்;. மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுவர்.
35-أَللَّهُمَّ إِنَّا نَسْـأَلُكَ مُـوْجِبَاتِ رَحْمَـتِكَ
وَعَزَائِمَ مَغْفِـرَتِكَ وَالسَّـلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ
وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالْفَوْزَ بِالْجَنَّةِ
وَالنَّجَاةَ مِنَ النَّارِ.
யாஅல்லாஹ்! உனது அருளைப்
பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும்
நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து
நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி
பெறவும் நரகை விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு)
நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.
36-أَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ
سِنِّيْ، وَانْقِطَاعِ عُمُرِيْ
யாஅல்லாஹ்! எனது முதுமைப்
பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும் உன்னுடைய அருட்
கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!
37-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ
دَارِيْ،وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ
யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை
மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டை விசாலமாக்குவாயாக! என்னுடைய உணவில்
அபிவிருத்தி செய்வாயாக!
38-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ،وَرَحْمَتِكَ
فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ
யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத்
தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான்
உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு எவரும்
சொந்தம் கொள்ள முடியாது.
39-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّيْ،
وَالْهَدْمِ، وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوْذُ بِكَ أَنْ
يَتَخَـبَّطَنِيَ الشَّـيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوْذُ بِكَ
أَنْ أَمُوْتَ فِيْ سَبِـيْلِكَ مُدْبِرًا، وَأَعُوْذُ بِكَ أَنْ
أَمُوْتَ لَدِيْغًا
யாஅல்லாஹ்! உயரத்திலிருந்து
கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை
விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும்,
உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டிஓடி
இறப்பதை விட்டும், (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை
விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
40-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُوْعِ، فَإِنَّهُ
بِئْسَ الضَّجِيْعُ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْخِيَانَةِ،
فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ
யாஅல்லாஹ்! பசியை விட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில்
நிச்சயமாக அது மனிதனை கீழே சாய்ப்பதில் மிகவும் தீயது. மேலும்
மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில்
நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்.
துஆ
எண் |
ஆதார நூல் |
31 |
புகாரி |
32 |
முஸ்லிம் |
33 |
புகாரி, முஸ்லிம் |
34 |
புகாரி, முஸ்லிம் |
35 |
ஹாகிம் |
36 |
ஹாகிம் |
37 |
அஹமத் |
38 |
தப்ரானி |
39 |
நஸயீ |
40 |
அபூதாவூத் |
அடுத்த பக்கம்
|