Index |Subscribe mailing list | Help | E-mail us

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (பகுதி 2)

M.M. அக்பர் அவர்களின் அல்லாஹ்வை அறிந்து கொள்ளுங்கள் என்ற மலயாளப் புத்தகத்தைத் தழுவி தமிழில் ஆக்கம்

தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

 

அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள்

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனைப் புரிந்து கொள்ள இயலும் என்ற எளிய தத்துவத்தைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றி திருக்குர்ஆனில் கூறிய அடிப்படையில் எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவ்வாறு புரிந்து கொண்டவர்கள் படைத்தவனை விடுத்து படைப்புகளுக்கு வணக்கத்தை அர்ப்பணிக்கும் வழிகேட்டில் ஒருபோதும் வீழ்ந்து விடமாட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரித்தானவன் என்பதை எடுத்தியம்புகின்றது.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனை அழைக்கவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.


 

وَلِلَّهِ الأسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ


அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)



 

قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الأسْمَاءُ الْحُسْنَى


நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள் எப்பெயரைக்கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. (17:110)



அல்லாஹ்வுக்கு திருப்பெயர்களோ பண்புகளோ கிடையாது என்ற கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரானதாகும். அல்லாஹ் பண்புகளால் பரிபூரணமானவன் என்பதே திருக்குர்ஆனின் நிலைபாடு. ஆனாலும் அவனது தன்மைகள் மற்றும் குணங்கள் மனிதனோடு ஒப்பிட்டுக் கூற முடியாதபடி தன்னிகரற்றதாகும். மனிதன் அல்லாஹ்வின் படைப்பு ஆதலால் அவனது தன்மைகள் வரையறுக்கப்பட்டதும் இட கால வரம்புகளுக்கு உட்பட்டதும் ஆகும். ஆனால் அல்லாஹ்வின் தன்மைகள் வரையறைகள் அற்றதும் இட கால வரம்புகளுக்கு அப்பாற்பட்டதும் ஆகும். அல்லாஹ் தன்னிகரற்வன் என்பதைப் பின்வரும் திருமறைவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றது.


 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ


அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவன்தான் (யாவற்றையும்) பார்ப்பவன், செவியேற்பவன் (42:11)


 

لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ


அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)


திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் நமக்குக் காணக்கிடைக்கும் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மற்றும் தன்மைகள் சஞ்சலமற்ற தெளிவான இறைக்கொள்கையின் பால் வழிகாட்டுகின்றன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதால் மட்டுமே இறைக் கொள்கையில் தெளிவான நிலையை அடைய முடியும். அல்லாஹ்வின் கருணையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டும் ஏராளமான திருநாமங்கள் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் காணக்கிடைக்கின்றன. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றிக் கூறும் சில வசனங்கள்

 


هُوَ اللَّهُ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الأسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالأرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ


அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை, மறைவானதையும் பகிரங்கமானதையும் அறிபவன். அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.


அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப் பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன், அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.


அவன்தான் அல்லாஹ், படைப்பவன், ஒழுங்கு படுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன், அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே துதி செய்கின்றன.அவனே (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (59:22-24)


اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ


அல்லாஹ் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இப்பவன், வேறு இலை. அவன் என்றென்ன்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரிதுயிலோ உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுன்னவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும் அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை. அவன் மிக உயர்ந்தவன், மகிமை மிக்கவன். (2:255)


هُوَ الأوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ


(யாவற¢றுக¢கும¢) முந¢த¤யவனும¢ அவனே. ப¤ந¢த¤யவனும¢ அவனே. பக¤ரங¢கமானவனும¢ அவனே அந¢தரங¢கமானவனும¢ அவனே. மேலும¢ அவன¢ அனைத¢துப¢ பொருள¢களையும¢ நன¢கற¤ந¢தவன¢. (57:103)


நபிகள் நாயகம் (ஸல்) ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும் முன் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


«اللْهُمَّ رَبَّ السَّموَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، لَا إِلهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَنْتَ الْأَوَّلُ لَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْاخِرُ لَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ لَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ لَيْسَ دُونَكَ شَيْءٌ. اقْضِ عَنَّا الدَّيْنَ، وَأَغْنِنَا مِنَ الْفَقْر»


பொருள்:

அல்லாஹ்வே! ஏழு வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்களது இறைவனே! ஒவ்வொரு பொருட்களின் இறைவனே! தவ்றாத், இஞ்சீல், ஃபுர்கான் ஆகியவற்வை இறக்கியவனே! வித்துக்களையும் கொட்டைகளையும் பிளர்த்துபவனே! வணக்த்திற்குரிய அல்லாஹ் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை நீ உச்சி முடியைப் பிடித்துள்ள ஒவ்வொன்றினதின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே முதன்மையானவன், உனக்கு முன்பு எதுவுமில்லை! நீயே முடிவானவன் உனக்குப் பின்பு எதுவுமில்லை! நீயே வெளிப்படையானவன் உனக்கு மேல் எதுவுமில்லை! நீயே மறைந்தவன் உன்னை விட்டும் (மறைந்தது) எதுவும் இல்லை! என் கடனை நிறைவேற்றிவிடு! ஏழ்மையைவிட்டும் என்னைச் சீமானாக்கிவிடு! (முஸ்லிம்)


உனக்கு மேலாக எவரும் இல்லை என்பதன் கருத்து, உன்னை விட மேலானவனோ உன்னை விட மிகைத்தவனோ உயர்ந்தவனோ யாரும் இல்லை என்பதாகும். மேலும் உனக்குக் கீழாக யாரும் இல்லை என்பது, உன்னை விட்டும் மறைந்ததோ உனது அறிவுக்கு அப்பாற்பட்டதோ ஒன்றும் இல்லை என்பதாகும். தனது ஆச்சர்யம் மிக்க அற்புதங்களாலும் செயல்களாலும் அல்லாஹ் வெளிப்டையானவன். எனினும் இவ்வுலகில் நமது பார்வைகளுக்கு அப்பாற்பட்டவனும் வரையறைகளுக்குட்பட்ட நமது அறிவால் உவமிக்கவோ உருவம் கொடுக்கவோ இயலாத வண்ணம் அவனது தன்மைகள் மகத்துவம் மிக்கதும் தன்னிகரற்றதும் ஆகும்.


لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِير


அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவன்தான் (யாவற்றையும்) பார்ப்பவன், செவியேற்பவன் (42:11)

 


அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் இன்னும் சில வசனங்கள்


الْحَمْدُ للَّهِ الَّذِى لَهُ مَا فِى السَّمَـوَتِ وَمَا فِى الاٌّرْضِ وَلَهُ الْحَمْدُ فِى الاٌّخِرَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ - يَعْلَمُ مَا يَلْجُ فِى الاٌّرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ الرَّحِيمُ الْغَفُورُ


அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன் (34: 1,2)

 

َعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلا يَعْلَمُهَا وَلا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأرْضِ وَلا رَطْبٍ وَلا يَابِسٍ إِلا فِي كِتَابٍ مُبِينٍ


அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59)



اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَى وَمَا تَغِيضُ الأرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ سَوَاءٌ مِنْكُمْ مَنْ أَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهِ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ


ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது, (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே). (13: 8-10)


 

رَبُّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا


"(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?" (19:65)



وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ


அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன். (6:18)

 


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ للَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ


நபீயே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112 : 1-4)

 



عَنْ أبِى هُرَيرَةَ رَضِى اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا مَنْ حَفِظَهَا دَخَلَ الْجَنَّةَ وَاِنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الوِتْرَ


அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அதனை மனனமிட்டவர் சுவனம் புகுவார். மேலும் திண்ணமாக அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகின்றான்" (முஸ்லிம் - ஹதீஸ் எண்: 4835)

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் வந்திருக்கும் அல்லாஹ்வின் மகத்தான திருநாமங்களுள் சில.

 

பேரரசன்

الملك

நிகரற்ற அன்புடையவன்

الرحيم

அளவற்ற அருளாளன்

الرحمن

தஞ்சமளிப்பவன்

المؤمن

சாந்தியளிப்பவன்

السلام

மிகப்பரிசுத்தமானவன்

القدوس

அடக்கியாள்பவன்

الجبار

மிகைத்தவன்

العزيز

கண்காணிப்பவன்

المهيمن

ஒழுங்குபடுத்துபவன்

البارئ

படைப்பவன்

الخالق

பெருமைக்குரியவன்

المتكبر

அடக்கியாள்பவன்

القهار

மிக மன்னிப்பவன்

الغفار

உருவமளிப்பவன்

المصور

செவியேற்பவன்

السميع

தீர்ப்பு வழங்குபவன்

الفتاح

கொடையாளன்

الوهاب

மகத்துவம் மிக்கவன்

العظيم

நன்கறிபவன்

الخبير

பார்ப்பவன்

البصير

மிக உயர்ந்தவன்

العلي

நன்றியை ஏற்பவன்

الشكور

மிக மன்னிப்பவன்

 

 

الغفور

 

 

 

 

பதிலளிப்பவன்

المجيب

தயாளன்

الكريم

மிகப்பெரியவன்

الكبير

பிரியமுடையவன்

الودود

ஞானமுடையவன்

الحكيم

விசாலமானவன்

الواسع

பொறுப்பேற்பவன்

الوكيل

உண்மையானவன்

الحق

மகிமை வாய்ந்தவன்

المجيد

புகழுக்குரியவன்

الحميد

பாதுகாவலன்

الولى

உறுதியானவன்

المتين

நித்திய ஜீவன்

الحي

மரணிக்கச் செய்பவன்

المميت

உயிர்ப்பிப்பவன்

المحي

தேவையற்றவன்

الصمد

ஒருவன்

الأحد

நிலைத்திருப்பவன்

القيوم

வெளிப்படையானவன்

الظاهر

முடிவானவன்

الآخر

முதலாமவன்

الأول

நன்மை செய்பவன்

البر

மிக உயர்ந்தவன்

المتعال

மறைவானவன்

الباطن

ஒன்று சேர்ப்பவன்

الجامع

மன்னிப்பவன்

العفو

பாவமன்னிப்பை ஏற்பவன்

التواب

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அல்லாஹ்வைப் பற்றி திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இல்லாத பெயர்களை அவனுக்கு வழங்கிவருவது முறையற்றது என்பதே அறிஞர்களின் ஏகோபித்த நிலைபாடாகும். திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் காணப்படும் அல்லாஹ்வின் திருநாமங்களெல்லாம் அவனது அளவற்ற கருணையையும் வல்லமையையும் எடுத்தியம்பக்கூடியதாக உள்ளது. அத்தகைய நாமங்களின் மூலம் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் ஒருபோதும் கடவுள்கொள்கையில் சஞ்சலமடையவோ அல¢லாஹ¢வுககு இணைவைக்கும் அறியாமையில் மூழ்கவோ செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்.


திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனது உள்ளமையையும் தன்மைகளையும் செயல்பாடுகளையும் நமக்கு எடுத்தியம்புகின்றன. அல்லாஹ்வின் அறிவு, ஜீவன், சக்தி, பார்வை, செவியுறுதல், முகம், கைகள், அவனது பேச்சு, அதிகாரம், பெருமை, வள்ளல் தன்மை, தன்னிறைவு, கருணை முதலான அவனது உள்ளமை சார்ந்த பண்புகளானாலும் சரி அல்லது அர்ஷில் அமைதல், இறங்குதல், ஆச்சர்யப்படுதல், சிரித்தல், கோபம் கொள்ளுதல், மகிழ்ச்சி அடைதல், நேசித்தல், வெறுத்தல், ஆனந்தமடைதல், சூழ்ச்சி செய்தல், முதலான செயல் ரீதியான பண்புகளாயினும் சரி அவற்றில் அல்லாஹ் தன்னிகரற்றவனும் அவைககளை ஒப்பிடமுடியாமல் உயர்ந்தவனும் ஆவான் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகிய திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் வந்துள்ள அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் தன்மைகள் அனைத்தும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது என்பதை விளக்கினோம். இதற்கு மாற்றமாக அவற்றை மறுப்பதோ (தஃதீல்) படைப்பினங்களின் தன்மைகளுடன் ஒப்பிடுவதோ (தஷ்பீஹ்) அவற்றுக்கு உவமை கூறுவதோ (தம்ஃதீல்) அவற்றில் முரண்பாடு வருத்துவதோ (தஹ்ரீஃப்) உருவகப்படுத்துவதோ (தக்யீஃப்) கூடாது. அல்லாஹ்வின் பண்புகளை அவனது பண்புகள் என்று விளங்கவேண்டுமே ஒழிய அவற்றை உறுப்புகளாக (தஜ்ஸீம்) உருவகப்படுத்தவும் கூடாது

தனது வல்லமையையும் ஆற்றலையும் விளக்கும் வண்ணம் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் வாயிலாக அல்லாஹ் வெளிப்படுத்திய அவனது பெயர்கள் மற்றும் பண்புகள் அவனைப் பற்றிப் புரிந்து கொள்ள ஒரு விசுவாசிக்குப் போதுமானதாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்றோ அவனது தன்மைகள் வெறும் மாயை என்றோ கூறப்படும் கருத்துக்கள் அறிவுக்கு ஒவ்வாததாகும்

அல்லாஹ்வின் தன்மைகள் அனைத்தும் அறியப்பட்டதாகும். ஆனால் அது எப்படி என்பது பற்றிய அறிவு நமக்கு வழங்கப்படவில்லை. அதைப்பற்றி அல்லாஹ் மட்டுமே அறிவான். உதாரணமாக அல்லாஹ்வின் அர்ஷை எடுத்துக் கொள்வோம். அவன் அர்ஷின் மீது அமைந்துவிட்டான் எனக் கூறும் வசனங்கள். இதனைப் படிப்பதன் மூலம் இறைவனின் மகத்துவம் நமது உள்ளத்தில் ஊடுருவிச் சென்று அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் ஏற்படுகின்றது. அவனது கண்ணியத்தை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அது எவ்வாறு என்பதை நாம் அறிந்து கொள்ள இயலாது. அதுபற்றிய அறிவு நமக்கு வழங்கப்படவில்லை. அவனது கண்ணியத்துக்குத் தக்கவாறு அவன் அர்ஷில் அமைந்துவிட்டான் என்று புரிந்து கொள்வதே போதுமானது. இந்த முறையிலேயே அவனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்பித்துள்ளார்கள். சான்றோர்களாகிய முற்கால அறிஞர்கள், இமாம்களும் அவ்வாறே புரிந்து கொண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு மாறாக அல்லாஹ்வின் கோடானு கோடி படைப்புகளில் ஒன்றான மனிதன் தனது சிற்றறிவை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு வியாக்கியானம் கொடுப்பது முற்றிலும் தவறாகும். மகத்துவமும் கண்ணியமும் மிக்க அவனது செயல்களை இட கால வரையறைகளுக்குட்பட்ட இவ்வுலகின் செயல்களுக்கு ஒப்பிட்டு தங்களது சிற்றறிவுக்குப் புலப்படாத காரணத்தால் முரண்பட்ட விளக்கங்களைக் கொடுக்க சிலர் முற்படுகின்றனர். இவர்களின் இத்தகைய போக்கு அல்லாஹ்வை இயலாதவனாக்கி இறுதியில் நாத்திகக் கொள்கையின் இட்டுச்செல்லும் ஆபத்தான போக்காகும்.

அல்லாஹ்வின் தன்மைகளைக் கொண்டு மனிதனை வர்ணிப்தும் மனிதனின் தன்மைகளைக் கொண்டு அல்லாஹ்வை வர்ணிப்பதும் அநீதியாகும். அது ஏகஇறைக் கொள்கைக்கு முரணானதுமாகும். இப்படிப்பட்ட வர்ணனைகளே மனித சமுதாயத்தில் பல தெய்வக் கொள்கைக்கும் தனிமனித சிலை வணக்கங்களுக்கும் வித்திட்டது. இதற்கு ஒரு உதாரணமே அல்லாஹ் எங்கும் நிறைந்துள்ளான் என்ற வர்ணனை. இடகால வரையறைக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள அல்லாஹ்வை இடகால வரையறைக்குட்படுத்தி பிரபஞ்சத்தில் அவன் நிறைந்துள்ளான் என்ற சித்தாந்தம் அனைத்திலும் தெய்வீக அம்சம் காணப்படுகின்றது என்று கூறி கண்டதையெல்லாம் வணங்கும் வழிகேட்டுக்கு மனிதனை இட்டுச் சென்றது.

இவ்வாறு தூணிலும் துரும்பிலும் அல்லாஹ் இருக்கின்றான் என்ற சித்தாந்தமே கல்லையும் மண்ணையும் கடவுள்களாக வணங்குவதை நியாப்படுத்தும் நிலையை உருவாக்கியது. அல்லாஹ்வின் பண்புகள் குறித்து மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் அளித்த விளக்கத்துக்கு அப்பால் சென்று சுய விளக்கம் அளிப்பவர்கள் இத்தகைய வழிகெட்ட சித்தாந்தத்தில் சென்றடைந்தனர்.

அல்லாஹ்வின் பண்புகளுக்கும் தன்மைகளுக்கும் சுய இச்சைப்படி விளக்கம் அளித்தவர்கள் இறுதியில் இறைவனே இல்லை என்ற நாத்திகக் கொள்கையில் சென்றடையும் நிலை ஏற்படுகின்றது. பண்புகள் அல்லது தன்மைகளுக்கு வரைமுறைகள் உள்ளன எனவே அல¢லாஹ¢வுககென்று பண்புகளோ தன்மைகளோ கிடையாது என்ற கருத்தே அத்வைத சித்தாந்தத்தின் பிறப்பிடமாகும். அல¢லாஹ¢வுககு தன்மைகளோ செயல்களோ இல்லை என்பதால் படைத்தல் என்பதும் இல்லை, அப்படியாயின் பிரபஞ்சம்? பிரபஞ்சமே அல்லாஹ் என்பதே அத்வைத வாதிகளின் வாதம். ஆக பிரபஞ்சத்தைப் படைத்த ஒரு அல்லாஹ் இல்லை என்ற சித்தாந்தத்தின் பிறப்பிடமும் அத்வைதம் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ்வின் பண்புகளையும் தன்மைகளையும் திருநாமங்களையும் தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் அளிப்பது மிகவும் ஆபத்தான போக்கு என்பது இதன் மூலம் மிகவும் உறுதிப்படுகின்றது.

மனிதனின் சிற்றறிவு கொண்டு விளக்க இயலாத மகத்துவமும் கண்ணியமும் மிக்க உயர்ந்த பண்புகளுக்குச் சொந்தக்காரனே வல்லமை மிக்க அல்லாஹ். அவன் எல்லா குறைபாடுகளிலிருந்தும் பரிசுத்தமானவன். அவனது தன்மைகளை வரையறைகளுக்குட்பட்ட மனித அறிவைக் கொண்டு அளக்க இயலாது. எனவே அல்லாஹ்வின் தன்மைகள் குறித்து மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகிய திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். மாறாக அதனை படைப்புகளோடு ஒப்பிடுவது வழிகேடு ஆகும். இத்தகைய கொள்கையைவிட்டும் தவறி அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் அவனது மகத்துவம் மிக்க தன்மைகளையும் தம் மனோ இச்சைப்படி விளக்கியவர்கள் கொள்கைக் குழப்பத்துக்கு ஆளாகி இறுதியில் இறைநிராகரிப்புக் கொள்கை அடைந்தனர் என்பதே வரலாறு தரும் பாடமாகும்.


 

فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الأرْضِ رَبِّ الْعَالَمِينَ وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالأرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ


ஆகவே வானங்களுக்கும் இறைவனான, பூமிக்கும் இறைவனான அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! இன்னும் வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது. மேலும் அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (45:36. 37)