Featured Posts

நூல்கள்

கடமைகளை மறந்த உரிமைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …

Read More »

இயேசு அவர்களை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் (கட்டுரைத் தொடர்கள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – தொடர்களின் அட்டவணை:

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -11

இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -10

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்கமாட்டார் என்பதே பைபிளின் அடிப்படையான போதனையாகும். ‘ஒரே தேவனை வணங்குவதும் இயேசுவை இறைத் தூதராக விசுவாசிப்பதுமே நித்திய ஜீவனுக்கான வழி’ என்றே இயேசு போதித்தார். இந்த போதனைக்கு முரணானதாக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி மனித குலத்தின் பிறவிப் பாவத்தை போக்கினார் என்ற கொள்கை திகழ்கின்றது என்பதை சென்ற இதழில் விரிவாக …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 16 – ஸலாத்துல் வித்ர் – VIII

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்: வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் …

Read More »

மறுக்கப்படும் ஹதீஸ்கள் (தொடர்கள்)

பீஜேவினால் அவரது சுய புத்தியின் காரணமாக “மறுக்கப்படும் ஹதீஸ்கள்” தொடர்பான பதிவுகள்

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – இப்றாஹீம் நபியின் விவாதம்

‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்த தற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்’ என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்’ என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்’தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ‘ (2:256) ‘லா இக்ராஹ பித்தீன்’ மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது ‘குர்ஸி’ …

Read More »