ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 S.H.M. இஸ்மாயில் ஸலபி உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் …
Read More »நூல்கள்
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]
மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் …
Read More »ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]
ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த …
Read More »கவாரிஜிய சிந்தனை – ஓர் அறிமுகம்
-எம்.ஐ அன்வர் (ஸலபி)- இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு உமர் (ரழி) அவர்களின் கொலையோடு அரசியல் மற்றும சமூகரீதியான கெடுபிடிகளுக்கான பித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் “பித்னா” நிகழ்வு என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் கருத்து முரண்பாடு இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது. அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு …
Read More »அஹ்லுல் பித்ஆ அடிப்படை அடையாளம்
நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தி;ல் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் …
Read More »அன்பான இறைவன் தண்டிக்கலாமா? [இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2]
அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்’ நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் …
Read More »சொத்துப் பங்கீட்டில் பெண்ணுக்கு ஏன் இந்த அநீதி! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-32 [சூறா அந்நிஸா–09]
“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) ஆணை விட பெண்ணுக்கு சொத்து அரைவாசி குறைவாகக் கொடுக்கும் படி இந்த வசனம் கூறுகின்றது. பெண்ணுக்கு பாதிப் பங்கு என்பது அநீதியானது என முஸ்லிம் அல்லாத பலரால் விமர்சிக் கப்படுகின்றது. இது குறித்த தெளிவு அவசியமாகும். நபி(ச) அவர்கள் இஸ்லாமிய பிரசாரம் செய்ய முன்னர் பெண்ணுக்கு எவ்வித சொத்துரிமையும் …
Read More »கடனா? வஸிய்யத்தா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-31 [சூறா அந்நிஸா–08]
ஒருவர் தனது சொத்தில் 1/3 க்கு அதிகமாகாத அளவுக்கு வஸிய்யத் செய்யலாம். அந்த வஸிய்யத் பொது அமைப்புக்காகவும் இருக்கலாம். குர்ஆன் குறிப்பிட்ட, வாரிசுரிமை பெறாத தனி நபர்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் ஒருவரின் மரணத்தின் பின்னர்தான் சொத்துக்கள் பங்கிடப்படும். அவரது இறுதிக் கிரியைகளுக்கான செலவுகள் போன பின்னர் அவரது கடன்கள் மற்றும் வஸிய்யத்துக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் அவரது சொத்துக்கள் பகிரப்பட வேண்டும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது, “(இவ்வாறு …
Read More »இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்
ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை …
Read More »பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-30 [சூறா அந்நிஸா–07]
பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு “இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள். நபிமார்களின் வாரிசுகள்: ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் …
Read More »