Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பக்கம் 5

 

ஆடியோ ஓசையை கேட்க அரபி எழுத்துக்களின் மேல் கிளிக் செய்யுங்கள்

 

 

எண்

உச்சரிக்கும் விதம்

படத்தின் மூலம் விளக்கம்

உச்சரிப்பு

(ஆடியோ)

பெயர்

(ஆடியோ)

21

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் கடைசிப் பகுதியைக் கொண்டு உள்வாயின் மேற்பகுதியைச் சற்று அழுத்த வேண்டும். குரல் வாய்நிரம்ப ஒலிக்க வேண்டும். 

قَ ق
22

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் பிற்பகுதி மேல்வாயைத் தொட்டிருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.

كَ ك
23

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாக்கின் நுனிப் பகுதி, முன் மேற்பற்களின் ஈறைச் சற்றுப் பின்னால் தொட வேண்டும்.

لَ ل
24

இதனை உச்சரிக்கும் போது இரு உதடுகளையும் சேர்க்க வேண்டும். பற்களைச் சேர்க்காமல் இருக்க வேண்டும். நாவை மேலே உயர்த்த வேண்டாம். குரல் மெல்லியதாக இருக்க வேண்டும்.

مَ م
25

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாக்கின் நுனிப் பகுதி, முன் மேற்பற்களின் ஈறின் ஆரம்பப்பகுதியை இலேசாகத் தொடவேண்டும். குரல் மூக்கிலிருந்து வரவேண்டும்.
 

نَ ن