மனிதனின் கண்ணியத்தையும் சந்ததியையும்
பாதுகாப்பது இஸ்லாத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எனவே அது
விபச்சாரத்தை ஹராமாக்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக
இருக்கிறது. மேலும் அது (மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால்
மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 17:32)
மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுடன் அதன் பக்கம் நெருக்கிவைக்கும்
அனைத்து வழிகளையும் தொடர்புகளையும் அடைத்து விட்டது. இதனால்தான் பெண்கள்
பர்தா அணியவேண்டும் ஆண் பெண் இருவரும் தங்களின் பார்வைகளை தாழித்திக்
கொள்ளவேண்டும் அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது போன்ற
கட்டளைகளிட்டுள்ளது.
திருமணம் செய்தவன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் அவனுக்கு
மிகக்கடுமையான தண்டனையை வழங்குகிறது. அத்தண்டனையின் மூலம் பிறரும் படிப்பினை
பெறவேண்டும் என்பதற்காக அத்தண்டனையை பொதுமக்களுக்கு முன்னிலையில் வழங்குமாறு
கூறுகிறது. அத்தீயசெயலின் விபரீதங்களை உணர்வதற்காகவும் ஹராமான செயலில்
ஈடுபட்டிருந்த போது இன்பம் அனுபவித்த அனைத்து உறுப்புக்களும் தண்டிக்கப்பட
வேண்டும் என்பதற்காகவும் மரணிக்கும் வரை கல்லெறிந்து கொல்லவேண்டும் என
கட்டளையிடுகிறது.
விபச்சாரம் செய்தவன் திருமணம் செய்யாதவனாக இருந்தால் அவனை 100 முறை
சாட்டையால் அடிக்கவேண்டும். மேலுமு; தண்டனைக்குப் பிறகு அவ்வூரை விட்டும்
ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. பொது
மக்களுக்கு முன்னிலையில் தண்டிக்கப்பட்டு கேவலத்திற்கும் இழிவுக்கும்
ஆளாகிவிட்டதினால் அந்நிலை மாறவேண்டும் என்பதே ஊர் நீக்கத்தின் பிரதான
நோக்கமாகும்.
விபச்சாரம் செய்த ஆண்களும் பெண்களும் மண்ணரை எனும் திரைவாழ்க்கையில்
கீழ்ப்பகுதி விசாலமான மேற்பகுதி குறுகிய நெருப்புக் குண்டத்தில்
நிர்வாணமாக மிதப்பார்கள். அதன் கீழ்பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்படும்
அதன் வேதனையால் அலறுவார்கள். அந்த நெருப்பு அவர்களை மேலே உயர்த்திச்
செல்லும். அவர்கள் வெளியே தப்பிக்க முயற்சிப்பார்கள். அப்போது நெருப்பு
அணைந்துவிடும். உடனே கீழ்பகுதிக்கு வந்துவிடுவர். இவ்வாறு மறுமை நாள்வரை
வேதனை செய்யப்படுவார்கள்.
விபச்சாரம் வயது வரம்பின்றி அனைவரின் மீதும் ஹராம் ஆகும். அதில் மிகக்
கேவலமான நிலை யாதெனில் தனது வாழ்நாளின் தவணை முடியப்போகும் நிலையில்
கப்ர் வாழ்க்கை நெருங்கிவிட்ட முதியபருவத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுவது
தான்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
ثَلَاثَةٌ
لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ -قَالَ
أَبُو مُعَاوِيَةَ- وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ
அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ அவர்களை தூய்மைப்
படுத்தவோ அவர்களை -அருளுடன்- பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு
நோவினைதரும் கடும் வேதனை உள்ளது. அவர்கள்: விபச்சாரம் செய்யும் முதியவர்
பொய்யுரைக்கும் அரசன் பெருமையடிக்கும் ஏழை. (அறிவிப்பவர்:
அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 156)
விபச்சாரத்தின் மூலம் பொருளீட்டுவது மிகக்கெட்ட கேவலமான வியாபாரமாகும்.
இரவின் நடுப்பகுதியில் வானக் கதவுகள் திறக்கப்படும் நேரத்தில்
விபச்சாரி தான் பாதுகாக்க வேண்டிய உறுப்புக்களை தவறான பாதையில் பயன்படுத்த
பிறரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றாள். வறுமையின் காரணத்தினாலோ
தேவையின் காரணத்தினாலோ ஒரு போதும் மார்க்கச் சட்டத்தை தகர்த்து. ஹராமை
ஹலாலாக்கி விடமுடியாது. பத்தினிப்பெண்ணுக்கு பசியெடுத்தால் தன்னுடைய
மார்பகங்களில் கூட உணவருந்தமாட்டாள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட
பத்தினிப்பெண் வறுமைக்காக ஒரு போதும் தனது வெட்கத்தலங்களை விற்பனைப்
பொருளாக்கமாட்டாள்.
நாம் வாழும் இக்காலத்தில் மானக்கேடான அனைத்து வாயில்களும்
திறந்துவிடப்பட்டுவிட்டன. ஷைத்தான் தனது சூழ்ச்சியால் தனது பாதையை அவனது
நண்பர்களுக்கு மிகவும் எளிதாக்கிவிட்டான். அவனை பாவிகளும் மோசடிக்காரர்களும்
பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இதனால் பெண்களின் வெளிப்படையான அலங்காரமும்
அரைநிர்வாணமும் பெருகிவிட்டது. கண்களுக்கு கவர்ச்சியும்? தீயபார்வைகளும்
பரவலாகிவிட்டது. ஆண் பெண் ஒன்றாகக் கலப்பது சகஜமாகிவிட்டது. மஞ்சள்
பத்திரிக்கைகளும் நிர்வாணப் படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன.
பாவம் செய்ய வாய்ப்பிருக்கும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து
விட்டது. பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில்
இடம்பிடித்துவிட்டன. கற்பழிப்பும் கண்ணியமிழப்பும் விபச்சாரக் குழந்தைகளும்
சிசுக் கொலைகளும் மலிந்துவிட்டன.
யா அல்லாஹ்! எங்கள் மீது அருள்புரிவாயாக! கிருபை செய்வாயாக! எங்களுடைய
தவறுகளை மறைத்துவிடுவாயாக! இழிவான அனைத்து வழிகளை விட்டும் எங்களை
பாதுகாத்தருள்வாயாக! எங்களுடைய உள்ளங்களை தூய்மைப் படுத்திடுவாயாக! எங்கள்
மறைவான உறுப்புக்களை பத்தினித்தனமாக்கிடுவாயாக! எங்களுக்கும் ஹராமிற்கும்
மத்தியில் பெருத்திரையையும் நெடுஞ்சுவரையும் ஏற்படுத்திடுவாயாக!
மனைவி மறுப்பது |