அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள்
கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள்
வரமறுத்து விட்டதால் அவர் அவள்மீது கோபமாக இரவைக் கழித்தால் காலைவரை அவளை
மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றார்கள். (அறிவிப்பவர்:
அபூஹ{ரைரா(ரலி) நூல்: புகாரீ)
அதிகமான பெண்கள் கணவரோடு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்
பழிவாங்குகிறோம் என்று நினைத்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல
மறுக்கின்றார்கள். பெண்களின் இந்த தவறான முடிவு கணவன் ஹராமான செயல்களில்
ஈடுபடுவதற்கும், அவன் வேறொரு மனைவியை தேர்ந்தெடுக்கும் சிந்தனையை
ஏற்படுத்தவும் காரணமாகிறது. எனவே பெண்களின் செயல்கள் அவர்களுக்கே
பாதகமாகின்றன. எனவே கணவன் அழைப்பிற்கு மனைவி உடன்பட வேண்டும்.
அதுவே நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைத்தால்
அவள் ஒட்டகத்தின் முதுகில் அமர்ந்திருந்தாலும் -இறங்கி வந்து- அவருக்கு
பதிலளிக்கட்டும். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: இப்னுமாஜா)
மனைவி நோயாளியாகவோ, கற்பமாகவோ அல்லது வேறு ஏதேனும்
துன்பத்திலோ ஆட்பட்டிருக்கும் போது அது நீங்கும் வரை கணவன் அவளை உடலுறவு
போன்ற காரியங்களில் ஈடுபட அழைத்து அவளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது.
பெண் தனது கணவனிடம்
தலாக் விடக்கோருதல் |