Index | Subscribe mailing list | Help | E-mail us

பெண் தனது கணவனிடம் தலாக் விடக்கோருதல்
 

வாழ்வில் ஏற்படும் சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்காகவோ, அல்லது தான்விரும்பும் பொருளை தனக்கு தர மறுத்தாலோ உடனே பெண் தனது கணவனிடம் தலாக் விடக்கோருகின்றாள். நீ ஆணாக இருந்தால் என்னை தலாக் விட்டுவிடு! என்பது போன்ற ஆண்மைக்கு சவாலான, கோபமூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துகிறாள். இது போன்ற செயல்கள் தலாக்கிற்கும் குடும்பத்தைப் பிரிப்பதற்கும் குழந்தையின் வாழ்வு கெடுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். தூரநோக்கின்றி கோபத்தால் நிகழ்ந்து விட்ட இச்செயலின் காரணத்தால் பிறகு வருந்த வேண்டிய நிலை ஏற்படும். தலாக்கை தானாக வலியச்சென்று வாங்கியபின் வருத்தப்பட்டுப் பயனில்லை.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். தகுந்த காரணம் இன்றி பெண் தனது கணவனிடம் தலாக் விடக்கோரினால் அவளுக்கு சொர்க்தத்தின் வாசனை -கூட- ஹராமாகிவிட்டது. (அறிவிப்பவர்: ஸவ்பான்(ரலி) நூல்: இப்னுமாஜா)


தலாக் விடக்கோரும் பிரிவை விரும்பும் பெண்கள் இவர்களே நயவஞ்சக -முனாபிக்கான- பெண்கள். (அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்: அஹமத்)


மார்க்க காரணத்திற்காக தலாக் விடக்கோரினால் அதில் தவறில்லை. உதாரணமாக கணவர் தொழாதிருப்பது, போதைப் பொருளை பயன்படுத்துவது, ஹராமான செயல்களைச் செய்ய நிர்ப்பந்திப்பது, கடுமையாக துன்புறுத்தி அநீதம் செய்வது, மார்க்க உரிமைகளை தரமறுப்பது.....இவை போன்றவை. இந்நிலையில் அவருக்கு உபதேசம் செய்து இணைந்து வாழும் முயற்சிகள் பயன் தரவில்லை எனில் தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கணவனிடம் தலாக் கோருவதில் தவறில்லை.

 

பின் புறத்தில் உடலுறவு கொள்வது