பலவீனமாக
ஈமானுடைய சிலர் பெண்ணின் பின் புறத்தில் உடலுறவு கொள்வதை தவறாகக் கருதுவது
கிடையாது. ஆனால் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இந்தச் செயலில்
ஈடுபடுவர்களை நபி(ஸல்)அவர்கள் சபித்து இவ்வாறு கூறினார்கள்.
பெண்ணின் பின்பகுதியில் உடலுறவு கொள்பவன் சாபத்திற்குரியவனாவான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா)
மாதவிடாய் நேரத்திலோ, பெண்ணின் பின்பகுதியிலோ உடலுறவு கொள்பவனும்
ஜோஸியக்காரனிடம் செல்பவனும் முஹம்மது(ஸல்)அவர்களுக்கு இறக்கப்பட்ட
-மார்க்கத்-தை நிராகரித்துவிட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:
இப்னுமாஜா)
மார்க்க சிந்தனையுள்ள பல பெண்கள் இந்த ஈனச்செயல்களுக்கு கட்டுப்பட
மறுக்கின்றனர். அப்பெண்களை அவர்களின் கணவன், இதற்கு கட்டுப்படவில்லை எனில்
உன்னை தலாக் விட்டுவிடுவேன் என மிரட்டுகின்றனர். மார்க்க கல்வியற்ற, அல்லது
அறிஞர்களிடம் மார்க்க விளக்கங்களைக் கேட்க வெட்கப்படும் பெண்களை:
பெண்கள் உங்களுடைய விளை நிலமாவார்கள். எனவே நீங்கள் விரும்பியவாறு
அவர்களிடம் செல்லுங்கள்! (அல்குர்ஆன் 2:223) என்ற வசனத்தைக் கூறி ஏமாற்றி
இச்செயலுக்கு கட்டுப்பட வைக்கின்றனர்.
நபிமொழி, அல்குர்ஆனின் விரிவுரையாகும். பிறப்பு உறுப்பில் மட்டுமே
விரும்பியவாறெல்லாம் உடலுறவு கொள்ள நபிமொழியில் அனுமதியுள்ளது. பின்பகுதி
பிறப்பு உறுப்பல்ல மாறாக அது மலப்பாதை என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இரு
தரப்பினரும் உடன்பட்டு இச்செயலில் ஈடுபட்டாலும் இது ஹராம் என்பதில்
சந்தேகமில்லை. ஏனெனில் இரு தரப்பினரும் உடன்படுவது ஹராமை ஹலாலாக்கிவிடாது.
அன்னியப் பெண்ணுடன்
தனித்திருத்தல் |