4. பிறை
கண்ட பின்பே நோன்பும் பெருநாளும் |
1) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை
விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால்(அம்)மாதத்தை
முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்)அவர்கள்
கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள்.
மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக்
கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:
புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்தின்
ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும்.
ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை
தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது
நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும்.
காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும்
வரமுடியாது. "முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான்
மாதம் வரும் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்."
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|