5.
சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது |
1) ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால்
உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த
நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி(ஸல்)அவர்கள்
கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள்
அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும்
நோற்கக்கூடாது. காரணம் அந்த இரு நாட்களும் ரமளான் மாதமாக இருப்பதற்கு
வாய்ப்பிருக்கின்றது. இதற்கு "சந்தேக
நாட்கள்" என்று சொல்லப்படும். உதாரணமாக
ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், வியாழன் இரு நாட்களும் நோன்பு நோற்பது
சுன்னத்தாகும். இந்த இரு நாட்களில் வழமையாக நோன்பு நோற்று வருபவருக்கு
ரமளான் மாதத்துக்கு முந்திய ''சந்தேகமான நாட்களிலும்" நோன்பு நோற்க
அனுமதியுள்ளது.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|