7. ஸஹர்
உணவை தாமதப்படுத்துதல் |
1) நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக
நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு
ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள். (ஸ{ப்ஹ{டைய) பாங்குக்கும் ஸஹர்
உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள்
கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்:
புகாரி)
விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது
சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவுக்கும் சுப்ஹ{டைய பாங்குக்கும்
மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு
நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம்
வந்த பின்(அதாவது சுப்ஹ{டைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ
கூடாது.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|