Index

8. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு


1) நபி(ஸல்)அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹடைய பாங்குக்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பு பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் து}க்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால் குளித்துக் கொண்டால் மாத்திரம் போதும். ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்