அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் பெயரால் |
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ |
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது
பொய் கூறுவது பற்றி கடும் எச்சரிக்கை!
1- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில்
நுழையட்டும்!'
அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2) |
(1) باب تغليظ الكذب على رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ
1- حَدِيْثُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
(( لَا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ
فَلْيَلِجْ النَّارَ )) |
2- 'என்
மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது
இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்' என நபி(ஸல்) அவர்கள்
கூறியிருப்பதனால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல்
என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல்கள் : புகாரீ 108, முஸ்லிம் 4 |
2- حَدِيْثُ أَنَسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ قاَلَ : إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا
كَثِيرًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
:
(( مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ
النَّارِ )) |
3-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது
இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4 |
3- حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
(( وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ
مِنْ النَّارِ ))
|
4-
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய்
(உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது
வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்
கொள்ளட்டும்!'
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5 |
4- حَدِيْثُ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
(( إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ
كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ
النَّارِ )) |
அடுத்த பக்கம்
கேள்விகள் :
1) நபியவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறுபவர்களின் மறுமை
இருப்பிடம் எது?
2) மனிதர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக நபியவர்கள் சொல்லாத ஒன்றை இது
நபியவர்கள் கூறியது என்று கூறலாமா? அப்படி கூறினால் கிடைக்கும் தண்டனை
என்ன?
|