Index |Subscribe mailing list | Help | E-mail us

ஹிஜ்ரி 1426-ன் ஈதுல் அள்ஹா

தமிழில்: நெல்லை இப்னு கலாம் ரசூல்

 

 

ஹிஜ்ரி 1426 துல்ஹஜ் 10 ஆம் நாளாகிய ஈதுல் அள்ஹா என்றைக்கு என்பதை மிக எளிதாக கணக்கிட்டுவிடலாம். மேலும் சந்திரனை வைத்து அந்நாளைக் கணிப்பதை நமது கணக்கீட்டின் மூலமும் உறுதி செய்து கொள்ளலாம்.

 

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும்: "அவை மக்களுக்கு காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன." (2:189)

 

நடப்பு நாளை ஆரம்ப ஹிஜ்ரி தினத்திலிருந்து கழித்து கணக்கீட்டைத் துவங்க வேண்டும். அதாவது 1426 ஹிஜ்ரியின் துல்காயிதா மாதத்தின் முதல் நாள் என்ன கிழமை வருகிறது என்பதைக் கீழ்கண்டவாறு கணக்கிட்டு அறியலாம்.

 

வித்தியாசம்: 1425 வருடங்கள், 10 மாதங்கள், 0 நாட்கள்

 

எனவே 1425 வருடங்களை 354.3671 -ஆல் பெருக்கினால் 1425 ஆண்டுகளுக்கு எத்தனை நாட்கள் என்று தெரிந்துவிடும்.

 

10 மாதங்களை 29.53 - ஆல் பெருக்கினால் 10 மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்று தெரிந்துவிடும். இரண்டையும் கூட்டினால் மொத்த நாட்கள் கிடைத்தவிடும்.

 

மொத்த நாட்களை 7 ஆல் வகுத்து எத்தனை வாரங்கள் என்பதை கணக்கிட வேண்டும். அதில் கிடைக்கும் மீதியைக் கொண்டு எந்தக் கிழமை என்பதை தெளிவாக அறிந்துக் கொள்ளலாம்.

 

அதாவது மீதி எதுவும் இல்லையெனில் வியாழக்கிழமை.

மீதி 1 வந்தால் - வெள்ளி

மீதி 2 வந்தால் - சனி

மீதி 3 வந்தால் - ஞாயிறு

மீதி 4 வந்தால் - திங்கள்

மீதி 5 வந்தால் - செவ்வாய்

மீதி 6 வந்தால் - புதன்

 

அதாவது மீதி 1 வந்துள்ளது. எனவே வெள்ளிக்கிழமை. அதாவது 01.11.1426 (துல் காயிதா) வெள்ளிக் கிழமை துவங்குகிறது.

 

அதே போன்று சந்திரனின் நிலையைக் கண்ணால் கண்டும் இதனை உறுதி செய்து கொள்ளலாம். ஏனெனில் புதன் கிழமை (16.11.2005) ஷவ்வால் மாதத்தின் 14  முழுநிலவாகிய பெளர்ணமியாகும். மேலும் பிறையின் வளர்ச்சி துரிதமாக உள்ளது. இது ஷவ்வால் மாதத்தின் எண்ணிக்கை 29 நாட்களே என்பதை உணர்த்துகிறது. (தொடர்ந்து பிறையின் நிலைகளை ஆராய்பவருக்கு இது எளிதாக விளங்கும்)

 

இத்துடன் இணைக்கப்பட்ட சந்திரனின் பல நிலைகள் நம் முடிவுகளை உறுதி செய்ய மிக உறுதுணையாக இருக்கும். பிறை பார்ப்பதில் நாம் கொள்ளும் கருத்து வேறுபாடுகளைக் களையவும் உதவும்.

 

இனி துல்ஹஜ் மாதம் முதல் நாள் எப்போது என்பதைப் பார்ப்போம்.

 

 

 

 

72185 வாரங்களும் 3 நாட்களும் ஆகும்.

 

வியாழக்கிழமையிலிருந்து 3 நாட்கள் கூட்டினால் ஞாயிற்றுக் கிழமையாகும். ஹிஜ்ரி 1426 ன் துல்ஹஜ் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை.

 

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மாதம் துவங்கி, அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 8 வது நாள் யவ்முத்-தர்வியா வருகிறது. துல்ஹஜ் பிறை 9-ம் நாள் திங்கட்கிழமை யவ்முல்-அரஃபா. துல்ஹஜ் பிறை 10-ஆம் நாள் செவ்வாய் (10.01.2006) யவ்முன்-னஹர்.    புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் அதாவது துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் அய்யாமுத்-தஷ்ரீக் என நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

 

 

 

புதிய பிறை வியாழன் (01.12.2005) 15:01 UT

ஆகவே துல் காய்தா முதல் தேதி வெள்ளி 01/11/1426 (02.12.2005) - 30 நாட்கள்

 

 

 

புதிய பிறை சனி (31.12.2005) 03.12 UT

ஆகவே துல் ஹஜ் முதல் தேதி ஞாயிறு 01/12/1426 (01.01.2006) - 29 நாட்கள்

 



 

ஹிஜ்ரா காலண்டரின் உதவியால் சரித்திரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கையை மிகச் சரியாக கணக்கிட முடியும். மேலும் விபரங்களுக்கு www.hijracalendar.com செல்லவும்.

 

- மனிக் ஃபான்

 

குறிப்புகள்:

ஹிஜ்ரா நாட்காட்டி கணக்குப்படி:

1) வருடத்திற்கு 354.3671 நாட்கள்

2) மாதத்திற்கு 29.53 நாட்கள்.

3) ஈதுல் அத்ஹா என்னும் ஹஜ் பெருநாள் : துல்ஹஜ் பிறை 10-ஆம் நாள் செவ்வாய் (10.01.2006)

 


தொடர்புடைய தொடுப்புகள்:

bullet

பெருநாள் தேதி - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்

bullet

இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்