ஜித்தா இஸ்லாமிய
பல்சுவை நிகழ்ச்சி
கட்டுரைப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கட்டுரைகள் |
|
வீணாகும் நேரம்
(ஆண்களுக்கான தலைப்பு)
|
|
பர்தா பெண்களின் சுதந்திரத்தை
பறிக்கின்றதா?
(பெண்களுக்கான தலைப்பு)
|
நடுவர்கள்
1) முஜீபுர்ரஹ்மான்
உமரி
(Jeddah)
2) யூசுஃப் மதனி
(Jeddah)
3) ஷேக் அப்துல் காதர்
(Shuwaa Advertising, Jeddah)
4) முஹம்மது ஹுஸைன்
(Shipping Corporation of Saudi Arabia,
Jeddah)
விதிமுறைகள்
|
கொடுக்கப்பட்ட தலைப்பைத்
தழுவி கட்டுரை இருத்தல் அவசியம். |
|
சொந்தமான ஆக்கமாக இருக்க
வேண்டும்.
|
|
ஏற்கனவே பத்திரிக்கைகளிலோ
அல்லது இணையதளங்களிலோ வெளிவந்திருக்கக் கூடாது. |
|
குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைத்
தெளிவாகக் குறிப்பிட வேண்டும். |
|
வெள்ளைத்தாளில் நல்ல
கையெழுத்துடன் கூடிய நான்கு பக்கங்களுக்கு குறையாமலும் ஆறு
பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம். டைப்
செய்திருந்தால் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
|
கட்டுரையை காகித வடிவில்
மூடிய உறையிலிட்டு, உறையின் மேல் பெயர் மற்றும் தொலைபேசி
எண்ணிட்டு 18.09.2004 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
|
|
கட்டுரைத் தாள்களில் பெயர்
எழுதுதல் கூடாது. (உறையில் மட்டுமே பெயர் குறிப்பிட வேண்டும்). |
|
ஈமெயில், ஃபாக்ஸ், போஸ்ட்
மூலம் அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. |
|
ஒவ்வொரு தலைப்பிலும் தலா 3
கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியின் நாளன்று
(30.09.2004) பரிசு வழங்கப்படும். பரிசு பெற்ற கட்டுரைகள்
மட்டும்
www.islamkalvi.com மற்றும் நிகழ்ச்சிக்கான தளங்களில் பிரசுரிக்கப்படும்.
பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி மூலம்
செய்தி அறிவிக்கப்படும். |
|
ஜித்தாவில்
வசிப்பவர்களுக்கும், நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக்கொள்ள
இயலும் வெளியூர் வாசிகளுக்கும் இப்போட்டியில் கலந்துக்கொள்ள
அனுமதி உண்டு. |
|
நடுவர் குழுவின் முடிவே
இறுதியானது. |
|
நடுவர் குழுவினர்
போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதியில்லை. |
கட்டுரை
எழுதுபவர் கவனத்திற்கு:
|
நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு
செய்தியும் கட்டுரையுடன் தொடர்பு உள்ளதா என்பதை சிந்தியுங்கள். |
|
செய்திகளை
குறுந்தலைப்பிட்டு பத்திப் பத்தியாக பிரித்து எழுதலாம். |
|
கட்டுரையின் மையக்
கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, தலைப்புடன் தொடர்புடைய
குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களின் ஆதாரங்கள், சுவாரசியமான உண்மைச்
சம்பவங்கள், பத்திரிகை செய்திகள் மற்றும் புள்ளிவிபரங்களை
ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள். (உதாரணமாக பத்திரிகையின் பெயர்,
தேதி, மற்றும் புள்ளிவிபரம் வெளிவந்த புத்தகம் அல்லது
இணையதளத்தின் பெயர் போன்றவை). |
|
சம்பவங்களை சுருக்கமாகக்
குறிப்பிட்டு சொல்ல வரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம்
கொடுங்கள். |
தலைப்பும்
முக்கியக் குறிப்புகளும்
|
ஆண்களுக்கான கட்டுரைத்
தலைப்பு
"வீணாகும் நேரம்"
குறிப்புகள் :
1) நேரத்தின் முக்கியத்துவம்.
2) குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆதாரங்கள்.
3) பொழுதுப் போக்கு போர்வையில் தனிமனித, சமுதாய சீர்கேடுகள்
மற்றும் குற்றச்சாட்டுகள்.
4) வீணாகும் நேரத்தை பொன்னான நேரமாக்க உங்களின் மாற்று வழி.
5) கடந்துவந்த தவறானப் பாதையை உணர்ந்துக்கொள்ள உங்களின்
அறிவுரை. |
|
பெண்களுக்கான கட்டுரைத்
தலைப்பு
"பர்தா பெண்களின் சுதந்திரத்தை பறிக்கின்றதா?"
குறிப்புகள் :
1) குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரங்கள்.
2) பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்.
3) பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை பாதிக்கவுமில்லை எங்கள்
முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என்று வாழ்ந்து
காட்டியவர்களைக் கோடிட்டுக் காட்டுதல்.
4) பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்.
5) பர்தாவை பிற்போக்குத்தனம் என்று கூறுபவர்களின் நோக்கம்.
|
|