Index | Subscribe mailing list | Help | E-mail us

குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள்

ஆசிரியர் K.L.M. இப்ராஹீம் மதனீ

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَحِيْم

 أَحْكَامُ التَّجْوِيْد

தஜ்வீத் என்றால், குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் அதன் அதன் வெளியாகும் இடத்திலிருந்து வெளியாக்குதல், நீட்டுதல், குன்னா செய்தல், மெல்லினமாக வல்லினமாக ஓதுதல் இன்னும் இது போன்ற சட்டங்களோடு ஓதுவதற்கு தஜ்வீத் என சொல்லப்படும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இன்று முஸ்லிம்களில் எத்தனை சத விகிதமானவர்களுக்கு குர்ஆனை ஓதத் தெரியும்? அப்படி ஓதத் தெரிந்தவர்களில் தஜ்வீத் சட்டத்தோடு ஓதத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? அப்படி ஓதத் தெரிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே! இக்குறையை நீக்க வேண்டுமென்ற நன்னோக்கத்துடனேயே இச்சிறிய தஜ்வீத் குறிப்பு தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இதைப்படித்து குர்ஆனை உரிய முறையில் ஓதத் தெரிந்து கொள்ளுங்கள்.

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
1- நீங்கள் குர்ஆனை ஓதுங்கள், அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி ஸல்லல்லாஹ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2- குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும் சூரத்துல் ஆல இம்ரானும் முன்வந்து குர்ஆனை ஓதியவருக்கு(சுவர்க்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக) வாதாடும் என நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3- குர்ஆனை ஓதியவருக்காக (நாளை மறுமையில்) சொல்லப்படும். "நீர் குர்ஆனை ஓதிக்கொண்டு சுவர்க்கத்தின் (படித்தரத்தில்) ஏறிக்கொண்டு செல்வீராக. உலகத்தில் நிறுத்தி நிறுத்தி ஓதியது போன்று (இங்கேயும்) நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக. நீர் ஒதி முடிக்கும் கடைசி ஆயத்தே சுவர்க்கத்தின் உமது அந்தஸ்தாகும்" என அவருக்கு கூறப்படும் என்று நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதி)

4- குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். "அலிஃப்,லாம்,மீம் என்பது ஒரு எழுத்து" என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும், லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

"குர்ஆனை ஓதுவதினால் எந்த அளவுக்கு நன்மைகள் குவிகின்றன" என்பதை எண்ணிப்பாருங்கள். நீங்களும் இந்தக் குர்ஆனை ஒவ்வொரு நாளும் உரிய முறையில் ஓதப்பழகிக் கொள்ளுங்கள். அதன் மொழியாக்கத்திலிருந்தும் படிப்பினை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு நிதானமாகப் படியுங்கள். அதன் ஏவல் விலக்கல்களை எடுத்தும் தவிர்த்தும் நடந்திடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நமது ஈருலக வாழ்க்கையையும் வெற்றி உள்ள வாழ்க்கையாக ஆக்கப் போதுமானவன்.

யாஅல்லாஹ்! "இந்தக் குர்ஆனை நாளை மறுமையில் எங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடிய குர்ஆனாக" ஆக்கி வைப்பாயாக.

அன்புடன்

கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ

 

பதிவிறக்கம் பக்கம் செல்