2005 ஜனவரி
மாதம் ஒரு விடுமுறை நாளில் அது நடந்தது.
பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும்
நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை
நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக
பணிபுரியக்கூடும்.
நாங்கள் போய் சேர வேண்டிய நகரம் 4 கி.மீட்டர் என்று வழிகாட்டியது.
இவ்வாறு வரும் பயணிகளை பொது நிறுத்தங்களில் இறக்கிவிடுவது வாடிக்கை.
டிரைவர், அப்பெண்ணை எங்கு போய் சேரவேண்டுமோ அங்கேயே போய்
இறக்கிவிடுகிறேன் என்றான்.
அந்த பெண் "தேவையில்லை, நன்றி!" என்றாள்
அவனும் விடவில்லை. நச்சரித்தான்.
3 கி.மீட்டர்
தன்னைப்பற்றி அதுமாதிரியான பெண் என்று நினைத்துக்கொண்டான் என்பதை
புரிந்து, அவனிடம், "என் கணவனை பொது நிறுத்தத்திற்கு வரச் சொல்லி
அழைக்க உங்கள் கைத்தொலைபேசியை சற்று தரமுடியுமா" என்றாள்.
"போதுமான கிரெடிட் இல்லை" என்றான் அவன்.
2 கி.மீட்டர்
"மிஸ்டு கால் (missed call) தர மட்டும்தான்", என்றாள்.
கைத்தொலைபேசி Caller I.D. வசதி மூலம் தன்னை சிக்க வைக்க முயலுகிறாள்
என்பதை புரிந்துக்கொண்டு அமைதியானான்.
1 கி.மீட்டர்
மீண்டும் கேட்டாள் அப்பெண்.
கார் பொது நிறுத்தத்தை வந்தடைந்தது.
(உண்மைச்
சம்பவம் - சிறிய மாற்றங்களுடன்)
|