( إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ
وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفِّدَتِ الشَّيَاطِينُ )
ரமலான் வந்து விட்டால்
சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள்
அடைக்கப் படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி,
நூற்கள் : புகாரீ,
முஸ்லிம் 1793)
( إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ
مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ
أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا
يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ
فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ )
சொர்க்கத்தில் ரய்யான்
என்றழைக்கப்படும் ஒரு வாயில் உள்ளது. மறுமை நாளில் அதில்
நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதில்
நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என அழைப்பு விடுக்கப்படும்.
உடனே அவர்கள் எழுந்து அதனுள் செல்வார்கள். அவர்களைத் தவிர வேறு
எவரும் அதில் நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாயில்
மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அதில் எவரும் நுழையமாட்டர்கள் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் -ரலி, நூற்கள்
: புகாரீ 1763, முஸ்லிம்)
( فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ فِيهَا بَابٌ يُسَمَّى
الرَّيَّانَ لَا يَدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ )
சொர்க்கத்திற்கு எட்டு
வாயில்கள் உள்ளன. அதில் ரய்யான் என்றழைக்கப்படும் ஒரு வாயில்
உள்ளது. நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ
3017)
( . . . وَمَنْ دَخَلَهُ لَمْ يَظْمَأْ أَبَدًا )
அந்த வாயிலில் நுழைபவருக்கு ஒரு
போதும் தாகமே ஏற்படாது என்ற வாசகம் திர்மிதீயின் அறிவிப்பில் இடம்
பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 696)
(. . . وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ
لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ )
அல்லாஹ்வின் பொருத்தத்தைப்
பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு நோன்பு நோற்பாரானால் அதன் மூலம்
அவர் சொர்க்கம் செல்வது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி,
நூல் : அஹ்மத் 22235)
|